2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

Bairaha Farms PLC எல்லாலமுல்ல கிராமத்துக்கு உதவி

S.Sekar   / 2022 ஜூலை 11 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதப்படுத்திய கோழி இறைச்சி விற்பனையில் ஈடுபடும் Bairaha Farms PLC, கம்பஹா மாவட்டத்தில் உள்ள எல்லாலமுல்ல கிராமத்தில் உள்ள சமூகத்துக்கு உலர் உணவுப் பொருட்களை விநியோகிப்பதன் மூலம் மற்றொரு மகத்தான சமூக பொறுப்புணர்வுச் செயல் திட்டத்தை நிறைவு செய்துள்ளது.

எல்லாலமுல்ல கிராமத்தில் Bairaha பதப்படுத்தும் தொழிற்சாலை அமைந்துள்ளதுடன், இந்த முயற்சியானது கிராம சமூகத்தின் அடிப்படை உணவுத் தேவைகளில் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்க உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அர்த்தமுள்ள சமூக பொறுப்புணர்வுச் செயல் திட்டமாகும். 400 உலர் உணவுப் பொதிகளின் விநியோகம் எல்லாலமுல்ல விகாரையில் இடம்பெற்றது. பிரதம குரு, எல்லாலமுல்ல கிராம மக்கள் மற்றும் Bairaha Farms PLC நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் 380 உலர் உணவுப் பொதிகள் அப்பகுதியின் உள்ளூர் பள்ளிவாசல் மூலம் விநியோகிக்கப்பட்டன. பொருளாதார நெருக்கடியும், உணவு கிடைப்பதில் சிரமங்களும் எழுந்துள்ள நேரத்தில், அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களைப் பெற்று எல்லாலமுல்ல சமூகம் பெரிதும் பயனடைந்துள்ளது.

Bairaha Farms PLC நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'சமூகத்திற்கும் எமது சக இலங்கைப் பிரஜைகளுக்கும் பங்களிப்பாற்றுவது எமது நிறுவன கலாச்சாரத்தின் ஒரு முக்கிய கோட்பாடாக உள்ளதுடன், இது எமது சமூகப் பொறுப்புணர்வுச் செயல் திட்டங்களிலும் பிரதிபலிக்கின்றது. இந்த பொருளாதார நெருக்கடியின் போது தமது அடிப்படை உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் பல சவால்களை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் ஈட்டுகின்ற மற்றும் நலிவுற்ற சமூகம் எல்லாலமுல்ல கிராமத்தில் உள்ளது. எங்களின் பெறுமதிமிக்க பணியாளர்கள் பலருடன் எங்கள் பதப்படுத்தல் தொழிற்சாலையும் அங்கு அமைந்திருப்பதால், இச்சமூகம் நம் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. அத்தகைய சமூகங்களுக்கு பிரதியுபகாரம் செய்ய வேண்டும்; என்பதில் நாங்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். பொறுப்புணர்வுமிக்க வர்த்தக நிறுவனம் என்ற வகையில், இந்த சந்தர்ப்பத்தில் முன்வந்து அவர்களின் கஷ்டங்களைக் குறைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,' என்று குறிப்பிட்டனர்.

இந்நிறுவனம் அதன் Help to Learn திட்டத்திற்காக புகழ்பெற்றதுடன், இது நாட்டின் பல பகுதிகளில் அமைந்துள்ள 600 க்கும் மேற்பட்ட ஊழியர்களின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு உதவி வருகிறது. மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக விழிப்புலன் குறைபாடு உடையோர் போன்ற பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை மேம்படுத்துவதற்காக நிறுவனம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. FMCG Asia Awards விருதுகள் நிகழ்வில் பிரெய்லி (braille) முறையில் உணவு செய்முறைப் புத்தகத்தை வெளியிட்டதற்காக 2021 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சுற்றுச்சூழல் சமூக ஆளுகை முயற்சியின் வெற்றியாளராக Bairaha Farms PLC கௌரவிக்கப்பட்டுள்ளது. Bairaha Farms PLC ஆனது, நாடு முழுவதும் உள்ள அனைத்து விழிப்புலனற்றோருக்கான 18 பாடசாலைகளுக்கும் பிரெய்லி புத்தகங்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் அனைவரையும் அரவணைத்து உள்ளடக்குவதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X