Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 21 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சி, அதன் பிரதான வர்த்தக நாமங்களில் ஒன்றான Britex தயாரிப்புகளை மீளறிமுகம் செய்துள்ளது. உயர் தர வர்ண துருப்பிடிக்காத மற்றும் பொதுத்தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு மேற்பூச்சு வகைகள் இந்த வர்த்தக நாமத்தின் கீழ், 50 ஆண்டுகளுக்கு மேலாக சந்தையில் பயன்படுத்தப்படுகிறது.
இன்று, primer, undercoat மற்றும் topcoat போன்ற மூன்று விதமான அனுகூலங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஒரே மேற்பூச்சு வகையாக Britex அமைந்துள்ளது. இதன் மூலமாக, மேற்பூச்சு வகைகளில் ஏற்படும் செலவீனத்தில் மூன்றிலிரண்டு பகுதியை வாடிக்கையாளர்களுக்கு மீதப்படுத்திக் கொள்ள முடியும். Britex ஐ Britex Turpentine கொண்டு மென்மையாக்கி, மேலதிகமாக 33 சதவீதமான பகுதிகளுக்கு பூசிக்கொள்ள முடியும்.
Britex வர்த்தக நாமம் சந்தையில் பரந்தளவு பாதுகாப்பு மேற்பூச்சு வகைகளை 50 ஆண்டுகளுக்கு மேலான நம்பிக்கையை வென்றுள்ளதுடன், சர்வதேச தரங்களுக்கமைய, சகாயமான விலையில் உயர் தரமான தயாரிப்புகளைக் கொண்டுள்ளது.
இன்டஸ்ரியல் அஸ்பால்ட்ஸ் (சிலோன்) பிஎல்சியின் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு நாம் தொடர்ச்சியாக காண்பிக்கும் அர்ப்பணிப்பு என்பது, எமது வியாபார கொள்கையில் மத்திய நிலையை வகிக்கிறது. சந்தையில் நாம் சமர்ப்பிக்கும் எமது தயாரிப்புகள் எமது வியாபாரக் கொள்கைகளை மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நாட்டில் எம்மை மிகச்சிறந்த இரும்பு பெயின்ட் நிபுணராக இச்செயற்பாடுகள் நிலைநிறுத்தியுள்ளது” என்றனர்.
மேலும், Britexஇல் பெருமளவு ஒன்றிணைந்த தயாரிப்புகள் காணப்படுவதுடன், சாதாரண மற்றும் விசேட வர்ண துருப்பிடிக்காத மற்றும் பொதுப்பாவனை இரும்பு மேற்பூச்சுகள் மற்றும் குறைந்த விலையிலமைந்த மற்றும் உயர் தரம் வாய்ந்த Turpentines மற்றும் Thinners போன்றன உள்ளடங்கியுள்ளன. உள்ளக மற்றும் தொழிற்துறை பாவனைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான நம்பிக்கையை Britex கொண்டுள்ளது.
அரிப்பைத் தடுக்கும் மேற்பூச்சு முதல் பெயின்ட் மென்மையாக்கி வரை சகல விதமான தயாரிப்புகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ள Britex, அதன் தரத்தை உறுதி செய்துள்ளதுடன், பல தலைமுறைகளாக இரும்பு வேலைப்பாடுகளில் ஈடுபடுவோர் மத்தியில் தரத்துக்கான நம்பிக்கையைப் பெற்றுள்ளது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago