Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஏப்ரல் 17 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
CDB நிறுவனம், இல 30, ஸ்ரீ ராமநாதன் வீதி, கொழும்பு 13 எனும் முகவரியில் அமைந்துள்ள அதன் கொட்டாஞ்சேனை கிளையை புதுப்பித்து திறந்து வைத்தது.
இந்தப் புதியக் கட்டிடத்தினை வாடிக்கையாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் CDBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்காரவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
CDBஇன் அலுவலகத்தின் சிறந்த கட்டிட வடிவமைப்பு மற்றும் விசாலமான பணியிடம் போன்றவற்றை பிரதிபலிப்பதாக இப்புதிய கொட்டாஞ்சேனை கிளை அமைந்துள்ளது. நேர்மறையான பணியிடச்சூழலை உருவாக்குவதற்காக வசதியான ஆக்கபூர்வ பணியிடங்களுடன் இக்கிளைப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான நவீன நிதிச்சேவைகள் ஊடாக மக்களின் வாழ்வை மேம்படுத்தும் CDBஇன் குறிக்கோளுக்கிணையாக, எதிர்காலத்தில் நாடுமுழுவதும் உள்ள அனைத்து கிளைகளும் கூட்டாண்மை அலுவலக வடிவமைப்பை ஒத்த தோற்றத்தில் புதுப்பிக்கப்பட்டவுள்ளன.
நாடளாவிய ATM வலையமைப்பின் ஆதரவுடன் நிலையான வைப்புகள், சேமிப்பு கணக்குகள், தனிநபர் கடன்கள், குத்தகை மற்றும் வாகன கடன் வசதிகள், தங்க கடன்கள் மற்றும் டெபிட் கார்ட் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நிதிச்சேவைகளை வழங்கி வரும் CDBஇன் புதிய கொட்டாஞ்சேனை கிளை ஊடாக கொட்டாஞ்சேனை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ளோர் தற்போது தங்களது நிதி தேவைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
2 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago