Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 28 , பி.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
விவசாய சமூகங்கள் மத்தியில் சிறுவர்களின் கல்வியை மேம்படுத்தி, அவர்களுக்கு உதவும் நோக்குடன் CIC Agri Business இன் அங்கமான CIC seeds, நிறுவனத்தின் முழுமையான வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான “CIC MANUSSAKAMA” மூலம், தமது செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.
அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தினூடாக கிராமப்புற பொருளாதாரத்தின் தரத்தை மேம்படுத்தி, ஆதரவளிப்பதில், தொடர்ச்சியான பங்களிப்புடன், வெளிப்படையாக அறியப்பட்டுவந்துள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், கிராமப்புற விவசாய சமூகங்களின் முக்கியமான தேவைகளை இனங்கண்டு, அவற்றைத் தீர்த்துவைப்பதற்காக “CIC MANUSSAKAMA” செயற்றிட்டத்தை 2008ஆம் ஆண்டில் CIC Holdings ஆரம்பித்திருந்தது. CIC இனால் பொறுப்பெடுக்கப்படுகின்ற வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகள் அனைத்தும், “CIC MANUSSAKAMA” செயற்றிட்டத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், இச்செயற்றிட்டங்களின் மூலமாக, முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகளின் காரணமாக, அவை பல பரிமாணங்களையும், பன்முகத்தன்மையும் கொண்ட சமூக நலன்புரிச் செயற்றிட்டமாக அவை வளர்ச்சிக் கண்டுள்ளன.
உயர்ந்த அளவில் பன்முகத்தன்மை கொண்ட வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்றிட்டத்தின் மூலமாக, பல்வேறு முக்கியமான செயற்றிட்டங்களை முன்னெடுப்பதில் CIC seeds தற்போது மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது. கிராமப்புறங்களில் கல்வி முறைமையின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றை மகத்தான அளவில் திறன்மிக்கவையாக மாற்றும் முயற்சிகளை அதன் மூலமாக முன்னெடுக்கின்றது. இது தொடர்பில் விளக்கமளித்த CIC Holdings PLC நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமந்த ரணதுங்க, “2016 ஆம் ஆண்டில், பிபிலை என்ற இடத்தில், தடங்கொல்ல மகா வித்தியாலயத்துக்க குழாய் மூலமான குடிநீர் விநியோக ஏற்பாட்டை நாம் வழங்கியிருந்தோம்.
விவசாய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இன்னும் அதிகமான அளவில் உதவுவதற்காக இச்செயற்றிட்டத்தை, இந்த ஆண்டில் மேலும் மூன்று பாடசாலைகளுக்கு விஸ்தரிப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். மேலும், பிபிலையில் பிரதேச பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதான வசதிகளையும் CIC ஏற்பாடு செய்துள்ளது. தற்பொழுது நிறுவனமானது, மகியங்கனை, மொனராகலை மற்றும் கலன்பிந்துனுவௌ ஆகிய பிரதேசங்களில் குழாய் மூலமான குடிநீர் விநியோக செயற்றிட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இச்செயற்றிட்டத்திட்டங்களின் மூலமாக, 2,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிட்டார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago