2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

CLA விருதுகள் வழங்கலில் எயார்டெல்லின் ஊழியர்களுக்கு கௌரவிப்பு

S.Sekar   / 2022 மே 19 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

Airtel Lanka, அண்மையில் Colombo Leadership Academyஇனால் நடத்தப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த முகாமையாளர் விருது வழங்கும் நிகழ்வில் நிறுவனத்தின் மூன்று தலைவர்கள் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.

திறமையான நிர்வாகத்தை ஊக்குவிப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தும் 'Lead Right' போன்ற முன்னணி திட்டங்கள் மூலம், நிறுவனத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள முகாமையாளர்கள் திறம்பட்ட மற்றும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தலைவர்களாக திகழ்வதே எயார்டெல் லங்காவின் நோக்கமாகும். எயார்டெல் உள்ளூர் நிறுவனங்கள் மற்றும் எயார்டெலின் குளோபல் லீடர்ஷிப் அகாடமி போன்ற பங்குதாரர்களுடன் இணைந்து இதுபோன்ற திட்டங்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது.

இந்தச் சாதனை குறித்து எயார்டெல் லங்காவின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷீஷ் சந்திரா கருத்துத் தெரிவிக்கையில், “எங்கள் முகாமையாளர்கள் மற்றும் சிரேஷ்ட ஊழியர்களுக்கு இடையிலான தலைமைத்துவம் மற்றும் மூலோபாயத் திறன்கள் எதிர்கால பிரச்சினைகள், தேவைகள் மற்றும் சிறப்பான சேவையை வழங்கும் எங்களது நிறுவன செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம். சிறந்த அறிவு மற்றும் பன்முகத் திறன் கொண்ட தலைவர்களை உருவாக்குவதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த சாதனைகள் நிச்சயமாக ஒரு திருப்புமுனையைக் குறிக்கும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது எயார்டெல் லங்காவின் நிதிப் பிரிவில், வர்த்தக திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரதானி, எரந்த சிரிவர்தன மற்றும் தொடர்பு அனுபவம் (Contact Experience) பிரதானி, ஃபவாஸ் நிஸாம்டீன், “நிறுவன ரீதியான தொலைநோக்கு தொடர்பாக செயல்படுதல்” என்ற பிரிவில் விருதினை வென்றதுடன், Channel Accounting பிரிவில் சிரேஷ்ட முகாமையாளர் தமிந்த அகலங்க, “செயற்பாட்டு முடிவுகள் மற்றும் நடைமுறைப்படுத்தும் திறன்” பிரிவில் விருதினை வென்றுள்ளார்.

வெற்றிகரமான இரண்டு சுற்று மதிப்பீட்டிற்குப் பிறகு Airtel Lankaவின் வெற்றி கிடைத்துள்ளது. முதல் சுற்றில், ஒவ்வொரு உறுப்பினரின் பணியிடத்திலும் சக பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது சுற்றில், தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் CLAஇல் நிபுணர்களுடன் நேர்காணலுக்குத் தோற்றினர்.

இவர்கள் மூவரின் தலைமைத்துவ பாணிகளான, குழு முகாமைத்துவ திறன்கள், உத்திகளை செயல்படுத்துதல், தனிப்பட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தியது மற்றும் பல துறைகளில் சிறந்த திறன்களை வெளிப்படுத்தியுள்ளமை போன்றவை ஆகும்.

இந்த சாதனை குறித்து எரந்த சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “எயார்டெல் லங்காவில் பணிபுரிவதன் முக்கியத்துவங்களில் ஒன்று, மிகத் துல்லியமான கடமைகளை வழங்குவதுடன் தொடர்புடைய பயனுள்ள மூலோபாயமாகும். அதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என தெரிவித்தார்.

"எந்தவொரு வணிகமும் அதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் நிர்வாகக் குழுவின் ஆதரவின்றி சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க முடியாது மற்றும் வாடிக்கையாளர் திருப்தியின் மிக உயர்ந்த மட்டத்தை வழங்க நிறுவனத்திற்குள் அதே சேவை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் தனித்துவமான குழு." என தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ஃபவாஸ் நிசாம்தீன் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .