2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

‘CMA Excellence ஒன்றிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2023’ இல் SLT-MOBITEL பிரகாசிப்பு

Freelancer   / 2023 நவம்பர் 20 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL, பெருமைக்குரிய CMA சிறப்பு ஒன்றிணைந்த அறிக்கையிடல் விருதுகள் 2023 நிகழ்வில் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டது. வெளிப்படையான தொடர்பாடல் மற்றும் பங்காளர் ஈடுபாடு ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்காக இந்த கௌரவிப்புகளை SLT-MOBITEL பெற்றுக் கொண்டது.

SLT-MOBITEL இரு விருதுகளைப் பெற்றுக் கொண்டது. தொலைத்தொடர்பாடல் துறையில் சிறந்த ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கை மற்றும் ஒட்டுமொத்தப் பிரிவுகளில் மெரிட் விருது ஆகியன அவையாகும். SLT-MOBITEL இனால் பேணப்படும் வெளிப்படையான தொடர்பாடல் மற்றும் பங்காளர் ஈடுபாட்டுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்து வெளியிட்டிருந்த சிறந்த ஒன்றிணைந்த அறிக்கைக்காக சிறந்த ஒன்றிணைப்பு அறிக்கையிடல் விருது வழங்கப்பட்டிருந்தது. மேலும், ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடலில் சர்வதேச சிறந்த செயற்பாடுகளை பின்பற்றுகின்றமைக்கு நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் ஒட்டுமொத்த மெரிட் விருதை வென்றிருந்தமை அமைந்துள்ளது.

கூட்டாண்மை ஆளுகை, நிலைபேறாண்மை மற்றும் பொறுப்புக்கூரல் ஆகியவற்றில் உயர் நியமங்களை பேணுகின்றமைக்கு SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த விருதுகள் அமைந்துள்ளன. பங்காளர்களுக்கு தெளிவான மற்றும் முழுமையான வினைத்திறன் பற்றிய தரவுகளை வழங்கும் வகையில் நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பையும் இந்த விருதுகள் உறுதி செய்துள்ளன.

இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறந்த பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் அமைந்திருந்தது. இலங்கையின் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத நிறுவனங்கள் மற்றும் அரச உரிமையாண்மையில் இயங்கும் நிறுவனங்களை ஒன்றிணைந்த அறிக்கையிடலை பின்பற்றுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் இந்த ஒன்றிணைந்த அறிக்கையில் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்வு ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. செயன்முறையாக, முதலீட்டாளர்கள் மற்றும் பங்காளர்களுக்கு பெறுமதி வாய்ந்த உள்ளார்ந்த தகவல்களை உருவாக்கி, தக்க வைத்து அல்லது வெளிப்படுத்துவது என்பது தொடர்பான தகவல்களை வழங்குவதாக அமைந்துள்ளது. ஒன்றிணைந்த அறிக்கையிடல் என்பது சகல பங்காளர்கள், ஈடுபாட்டைக் கொண்ட ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், விநியோகத்தர்கள், வியாபார பங்காளர்கள், உள்நாட்டு சமூகத்தார், சட்டவாக்குநர்கள், ஒழுங்குபடுத்துநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரின் ஈடுபாட்டை, நிறுவனத்தின் நீண்ட கால பெறுமதி உருவாக்க செயன்முறையை உறுதி செய்வதாக அமைந்திருக்கும்.

2013 ஆம் ஆண்டில் சர்வதேச ஒன்றிணைந்த அறிக்கையிடல் சம்மேளனத்தினால் வெளியிடப்பட்டு 2021 இல் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட சர்வதேச ஒன்றிணைந்த அறிக்கையிடல் கட்டமைப்புக்கு பொருத்தமான வழிமுறைகளை பின்பற்றி ஒன்றிணைந்த அறிக்கைகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்த மதிப்பீட்டில் நிதிசார் தகவல்கள் மாத்திரம் கவனத்தில் கொள்ளப்படாமல், நிதிசாரா விடயங்களுகம் இதர அளவிடப்படக்கூடிய அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

இந்த கௌரவிப்புகளினூடாக தொலைத்தொடர்பாடல் துறையில் மாத்திரம் SLT-MOBITEL இன் தலைமைத்துவம் உறுதி செய்யப்படாமல், வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றை முக்கிய அம்சங்களாகக் கொண்ட பரந்த கூட்டாண்மை துறையிலும் தலைமைத்துவ ஸ்தானத்தை கொண்டுள்ளமை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X