Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
S.Sekar / 2021 மார்ச் 15 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், அண்மையில் இடம்பெற்ற ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் CMA சிறப்பு விருதுகள் 2020 நிகழ்வில் இரு பிரதான விருதுகளை சுவீகரித்திருந்தது. இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டறிக்கைகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வின் தொனிப் பொருளாக “The Potent power of a Leader” அமைந்திருந்ததுடன், நிதியியல் மற்றும் லீசிங் பிரிவின் பீப்பள்ஸ் லீசிங் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், சிறந்த பத்து ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கைகளை தயாரித்திருந்தமைக்கான விருதையும் பீப்பள்ஸ் லீசிங் சுவீகரித்திருந்தது.
ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் CMA சிறப்பு விருதுகள் 2020 நிகழ்வு, அண்மையில் இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தினால் (CMA Sri Lanka) வழமை போன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் வடிவமைக்கப்படும் வருடாந்த அறிக்கைகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் வைபவம் ஏற்பாடு செய்யப்படுகின்றது.
2020 மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், 2019/20 நிதியாண்டுக்கான ஆண்டறிக்கையை பூர்த்தி செய்வதில் அதிகளவு கவனம் செலுத்தியிருந்ததுடன், அதனூடாக ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் கட்டமைப்பை பின்பற்றி சகல பங்காளர்களிடமிருந்தும் அவசியமான தகவல்களை பெற்றுக் கொண்டிருந்தது. நிறுவனத்தின் பெறுமதி உருவாக்கம் தொடர்பான விடயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், வியாபார மாதிரியின் உறுதித் தன்மை மற்றும் நிலைத்தன்மை, தந்திரோபாயம் மற்றும் மீண்டெழுந்தன்மை போன்றன உள்ளடக்கப்பட்டிருந்ததனூடாக, தொழிற்படும் சூழலில் எழும் சவால்களுக்கு பீப்பள்ஸ் லீசிங் முகக் கொடுக்கும் விதத்தை பிரதிபலித்திருந்தது.
இந்த விருதுக்கான போட்டியாளர்களுக்கு மெய்நிகர் முறையில் CMA ஸ்ரீ லங்கா ஏற்பாடு செய்திருந்ததுடன், இம்முறை ஒன்றிணைந்த அறிக்கையிடலுக்கு அதிகளவு முக்கியத்துவத்தை வழங்கியிருந்தது. சர்வதேச ஒன்றிணைந்த அறிக்கையிடல் சம்மேளனத்தின் கட்டமைப்பின் பிரகாரம் பணியாற்றியிருந்ததுடன், ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் CMA சிறப்பு விருதுகளுக்கான மதிப்பிடல்கள் ஒன்றிணைந்த அறிக்கையிடல் வழிகாட்டல்களின் அடிப்படை அம்சங்களான தந்திரோபாய நோக்கம் மற்றும் எதிர்காலத் திட்டம், தகவல் இணைப்புத்திறன், பெறுமதி உருவாக்கம், வளங்கள் ஒதுக்கீடு மற்றும் தங்கியிருக்கும் தன்மை மற்றும் பூர்த்தி போன்றவற்றின் பிரகாரம் இடம்பெற்றிருந்தன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
45 minute ago