2025 ஜூலை 30, புதன்கிழமை

Cash Bonanza பரிசிழுப்பின் வெற்றியாளர் திருகோணமலையில்

Gavitha   / 2016 ஒக்டோபர் 27 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல் நிறுவனத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான Cash Bonanza பரிசிழுப்புத் திட்டத்தின் மூலம், மாதாந்த மற்றும் நாளாந்த அடிப்படையில் வெற்றியாளர்களைத் தெரிவு செய்து ரூ. 3,500 பெறுமதியான அதிசொகுசு மிட்சுபிசி மொன்டேரோ ரக மோட்டார் வண்டி உட்பட, இலட்சக்கணக்கானப் பரிசுகளை வழங்கி வருகின்றது.இம்முறை மாதாந்த சீட்டிழுப்பின் வெற்றியாளராக திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த ராசநாயகம் அம்புதராஜா தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   

இது வரை 3500 இலட்சத்துக்கும் அதிகமானப் பரிசுத்தொகையை மொபிடெல் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. மேலும் கடந்த காலங்களில் ஹம்பலங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த, ஷானிகா ஸ்ரீமாலி, வாரியபொலவைச் சேர்ந்த, ஜே.எம்.துஷாந்த ஜயலத், படல்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரோஷான பிரியதர்ஷன மற்றும் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.எம்.பீ.பி.பி. குமாரி, தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த பீ. ஏ. குசுமாவதி, பதவிய ஸ்ரீ திஸ்ஸபுர பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.டி நிமால் ஜயசிங்க, களுத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த விஜித் ரோட்ரிகோ மற்றும் எப்பாவலை பிரதேசத்தைச் சேர்ந்த எச்.ஜே.எஸ் சேனவிரத்ன ஆகியோர் கடந்த பரிசிழுப்பில் மொன்டேரோ ரக கார்களை வெற்றி பெற்றிருந்தனர்.   

இம்முறை “ Cash Bonanza”’ களியாட்டம் மற்றும் இசை நிகழ்ச்சியுடன் பரிசளிப்பு விழாவும் மத்துகம பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அன்றைய தினம், “சீதுவ சகுரா” இசைக்குழுவினரின் இசைக்கச்சேரி நடைபெற்றதுடன், இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்கள் இவ்விசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாபெரும் பரிசிழுப்பின் வெற்றியாளரான ராசநாயகம் அம்புதராஜா மிட்சுபிசி மொன்டெரோ SUV ரக மோட்டார் வாகனத்தினை மொபிடெல் நிறுவனத்தின் பிரதான செயற்பாட்டு அதிகாரி நளின் பெரேராவிடமிருந்து பெற்றுக்கொண்டார். அத்துடன் 2016ஆம் ஆண்டில் மேலும் 3 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிகழ்வையொட்டி அன்றைய தினம் வருகைத் தந்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இலவச மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன் அன்றைய தினம் பல்வேறு களியாட்ட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிறுவர்களுக்கான Game zone மொபிடெல் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அனுபவிப்பதற்கான மொபிடெல் சேவை மத்திய நிலையமொன்று அமைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .