2025 ஜூலை 26, சனிக்கிழமை

Ceylinco Lifeஇன் பிரணாம புலமைப்பரிசில்கள்

Gavitha   / 2017 மார்ச் 06 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ceylinco Life, நாட்டின் எதிர்கால தலைவர்களுக்கான முதலீடாக அதன் 16ஆவது பிரணாம புலமைப்பரிசில் வழங்கல் வைபவத்தின் போது, உயர் சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கிய 160 புலமைப்பரிசில்களுடன், 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான பிரணாம புலமைப்பரிசில்களைப் பகிர்ந்தளித்துள்ளது.  

Ceylinco Life, வழங்கிய இந்த ஆகப்பிந்திய தொகுதி புலமைப்பரிசில்களைப் பெற்றுக் கொள்வோரில் 2016ஆம் ஆண்டு 5ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் திறமையாக சித்தி அடைந்த 28 மாணவ, மாணவிகள், 2015ஆம் ஆண்டு சாதாரணதர பாரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்ற 24 மாணவ, மாணவிகள், 2015ஆம் ஆண்டு உயர்தர பாரீட்சையில் உயர் சாதனையாளர்கள் 24 பேர் மற்றும் விளையாட்டு, கலாசாரம், கலைகள், நாடகம், புதியன கண்டுபிடிப்பு ஆகியவற்றில் தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் சிறந்த இடத்தை பெற்ற 10 பேர் ஆகியோர் அடங்கியிருந்தனர்.  

வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத் துணைவேந்தர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, “ஒரு புலமைப்பரிசில் ஒரு வாழ்க்கையாகும் ஏனெனில், வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு அது காரணமாக இருக்கிறது” என்று தெரிவித்தார். விவசாயத்துக்கு நல்லாரோக்கியமும் போதிய மழையும் எவ்வளவு அவசியமோ அதுபோல, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி அத்தியாவசியமானது என்றும் அவர் கூறினார். எமது மக்கள் நன்கு படித்தவர்களாகவும் சரி, பிழை அறிந்து அதன்படி நடப்பவர்களாகவும் இருந்தால் இலங்கை 5 வருடங்களில் அபிவிருத்தி அடைந்துவிடும் என்றும் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X