Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 மே 15 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதலாவது சர்வதேச கூட்டுத் திட்டமாக கட்டி எழுப்பப்பட்டு வரும் 185 மீற்றர் உயரத்தைக் கொண்ட Colombo City Centre கூட்டுத்திட்டத்தின் கட்டடக் கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் அண்மையில் முற்றுமுழுதாக நிறைவுசெய்யப்பட்டுள்ளன. இதன் கட்டுமானப்பணிகள் திட்டமிடப்பட்ட திகதிக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
2018 தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டுகாலத்தில் இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகளில் முக்கிய திருப்புமுனையை நிலைநாட்டுவதற்கான வாய்ப்புக் கிடைத்தமை தொடர்பாகத்தாம் மிக்க மகிழ்ச்சியடைவதாக, இத்திட்டத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஆணந்த்சுந்தரம் தெரிவித்தார். அதேபோல், 2018 ஓகஸ்ட் மாதத்தில் Colombo City Centre இல் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சர்வதேச கடைத்தொகுதிகள் திறந்து வைக்கப்படும்.
இலங்கை கட்டுமானத் துறையில் பாரிய புரட்சியை ஏற்படுத்தி நவீன பரிணாமங்களில், உயர் தரத்தில் திட்டமிடப்பட்ட திகதிக்கு முன்பாக இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யக் கிடைத்துள்ளமை,எமக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கான முக்கிய காரணியாகும்.
Colombo City Centre கூட்டுத்திட்டமானது இலங்கை முதலீட்டு வாரியாத்தின் அனுமதியைப் பெற்றுள்ள இலங்கையின் முதலாவது கூட்டுமுயற்சி இதுவாகும். Colombo City Centre 170 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திட்டமாகும்.
இலங்கையின் முன்னணி வியாபார பெரு நிறுவனமான அபான்ஸ் குழுமம் மற்றும் சிங்கப்பூரின் NextStory ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை உருவாக்கி வருகின்றன.
இலங்கையின் வியாபார கேந்திரமாகக் கருதப்படும் கொழும்புநகர மத்தியில்,பேய்ரே ஏரிக்கு அருகாமையில் ஸ்ரீமத் ஜேம்ஸ்பீரிஸ் மாவத்தையில்,அழகிய சூழலில் உருவாகிவரும் ColomboCityCentre திட்டத்தின் முதல் 5 மாடிகளும் கடைத்தொகுதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோடு,அவை 200,000க்கும் அதிகமான சதுரஅடி பரப்பளவில் உருவாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை நாமங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் மற்றும் 415 இருக்கைகள் கொண்ட சர்வதேச தரத்திலான உணவகம், 6 பிரம்மாண்ட சினிமா திரைகளைக் கொண்ட சினிமா அரங்கம் மற்றும் 400 வாகனங்களைத் தரித்து வைக்கக்கூடிய வாகனத் தரிப்பிடத்துடன் NextStory குழுமத்தின் பிரம்மாண்ட நாமமான Next ஹோட்டலும் 164 அறைகளுடன் இங்கே கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
அதேபோல் 192 சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பென்தர் ஹவுஸ் இந்தக் கூட்டுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, இங்கு வசிக்கும் குடியிருப்பு உரிமையாளர்களுக்கு கொழும்பு நகரத்தின் அழகையும், இந்து சமுத்திரத்தின் இனிமையையும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. இத்திட்டத்தின் சகல பணிகளும் 2019ஆம் ஆண்டுஆரம்பத்தில் நிறைவு செய்யப்படவுள்ளது.
Asia One Magazine இனால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது வழங்கும் விழாவில் ஆசியாவின் மிகச்சிறந்த விற்பனை நாமமாக ‘கோல்டன் குளோப் டைகர்ஸ்’ Brand Excellence விருதினை Colombo City Centre தனதாக்கிக்கொண்டது.
அதேபோல், இதன் சிறப்பம்சங்களுக்காக சிங்கப்பூரில் இடம்பெற்ற 2017 CMOஆசிய விருது வழங்கும் விழாவில் உயர்மதிப்பு மிக்க நாளைய எதிர்ப்பார்ப்புக்கான கூட்டுத் திட்டத்துக்கான விருதையும் Colombo City Centre தனதாக்கிக்கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
17 minute ago
34 minute ago