Gavitha / 2016 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்மாணத்துறை நிறுவனமான Coral Construction மாலைதீவுகளிலுள்ள ஹுல்ஹுமலேயில் 3,000 வீடு மற்றும் வர்த்தக அலகுகளை நிர்மாணிப்பதுக்காக Sea Life Global நிறுவனத்துடன் 700 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கான ஒப்பந்தத்தில், கடந்த ஜூலை 31ஆம் திகதி கைச்சாத்திட்டுள்ளது.
இந்த நிர்மாணத் திட்டமே, மாலைதீவுகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தமாகும்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய,Coral Property Developers நிறுவனத்தின் தலைவர் டொக்டர் எஸ். பிரபாகரன், '2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பயணத்தின் விளைவாகப் பெறப்பட்ட அடைவு இது.
இலங்கையில் பல சொகுசு மாடி மனைகளை நிர்மாணித்த பின்னர், இதேபோன்ற அளவிலான வேலைத்திட்டங்களை உலகில் எங்கும் மேற்கொள்ள முடியும். 3,000 வீடுகளையும் வர்த்தக அலகுகளையும் கொண்ட இவ்வேலைத்திட்டம், 3 படிகளில் நிறைவுசெய்யப்படும். முதலாவது படியில் 1,000 வீட்டு அலகுகள் காணப்படும். அவற்றில் 350, ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு விட்டன.
முதலாவது படி, 2018ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படும்' என்றார்.Sea Life Global Inc Pvt Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்மூஸா மொஹமட்டைச் சந்தித்து, இது போன்றதொரு வேலைத்திட்டம் பற்றி அறிந்துகொண்டமை குறித்துத் கருத்துத் தெரிவித்த டொக்டர் எஸ். பிரபாகரன், அதன் பின்னரே இவ்வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதுக்கு தீர்மானித்ததாகவும், அதன் விளைவாகவே
ஹுல்ஹுல்மலேயிலுள்ள ea Life Complex உதித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றியSea Life Global Inc Pvt Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மூஸா மொஹமட், '‘Coral Property Developers" போன்ற பங்குதாரர்கள் இருப்பது குறித்து நாங்கள் மகிழ்வடைகிறோம். இவ்வேலைத்திட்டத்தின் முதலீட்டாளர்களும் இந்த இணைப்பு வெற்றியடையும் என்பதில் எமக்குச் சந்தேகங்கள் கிடையாது என்பதோடு, இன்னும் வேறு பல வேலைத்திட்டங்களிலும் இது தொடருமென்பதில் எமக்கு நம்பிக்கையுள்ளது' என்றார்.
Ceylong Todayக்குக் கருத்துத் தெரிவித்த மாலைதீவுகளின் வீட்டுத்துறை மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சர் டொக்டர் மஹமட் முய்ஸு, 'இந்த வீட்டுத் திட்டத்தை மேற்கொள்வதுக்காக, எங்களுடைய உள்ளூர் நிறுவனத்துடன் oral Property Developers இணைந்தமை குறித்து நாம் மிகவும் மகிழ்வடைகிறோம். இன்னும் வேறு வாய்ப்புகளும் உள்ளன. விசேடமாக, துறைமுக அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, நிர்மாணத் தொழிற்றுறை போன்றவற்றில் இங்கு வந்து பணியாற்றவும் தொழில் புரியவும் விரும்பும் இலங்கை நிறுவனங்களுக்காக வாய்ப்புகள் திறந்தேயுள்ளன' என்றார்.
இந்த நிகழ்வுக்கு விசேட அழைப்பில் கலந்துகொண்டிருந்த இலங்கையின் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் கருணாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், 'இதுவொரு ஆரம்பம் மாத்திரமே. மாலைதீவுகளில் இலங்கை நிறுவனங்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் காணப்படுகின்றன என்பதை,Coral Developers காட்டியுள்ளார்கள். இவ்வேலைத்திட்டம் வெற்றியடைவதுக்காக, இலங்கையிலிருந்து உட்கட்டமைப்பும் ஏனைய உதவிகளையும் வழங்குவோம்' என்றார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அதிக செல்வமிக்க சுற்றுலாப் பயணிகளை மாலைதீவுகள் கவரும் நிலையில், ஏனைய துறைகளின் அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் எதிர்காலத்தில் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டினார். மாலைதீவுகளின் பொருளாதார விவகாரங்கள் அமைச்சரால், இலங்கையிலிருந்து உட்கட்டமைப்பு உதவிகளுக்காக விடுக்கப்பட்ட கோரிக்கையை ஞாபகமூட்டிய அமைச்சர் ரவி கருணாநாயக்க, அந்த உதவி, உடனடியாக வழங்கப்படுமெனத் தெரிவித்தார்.
இலங்கை நிறுவனங்கள், இலங்கையிலிருந்து வெளியே சென்று தமது செயற்பாடுகளில் ஈடுபடுவதுக்கு, இதுவொரு வழியெனத் தெரிவித்த அமைச்சர், இந்த நடவடிக்கை, இலங்கைக்கு வளத்தைக் கொண்டுவருமெனவும் குறிப்பிட்டார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago