2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

DFCC வங்கி Mastercard உடன் கைகோர்ப்பு

S.Sekar   / 2022 ஜூன் 24 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வியாபாரங்களுக்கு ஆதரவளிக்கும் முயற்சியில், DFCC வங்கி, இணையத்தின் ஊடாக பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதற்கும் இலத்திரனியல் முறையில் பணக் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கும் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டும் வகையில் தனது கொடுப்பனவு நுழைமுகத்தில் Mastercard ஐ செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. 

Mastercard கொடுப்பனவு நுழைமுகம் செயல்படுத்தப்படுவது வங்கியின் டிஜிட்டல் சேவை இடமளிப்பு முயற்சியில் மற்றொரு சாதனை இலக்காகும். டிஜிட்டல் பொருளாதாரத்தை நாடு அதிகரித்துச் செல்லும் அளவில் உள்வாங்கி வருவதால், வங்கியானது டிஜிட்டல் மாற்ற உள்வாங்கலை தொடர்ந்து முன்னெடுப்பதுடன், வங்கிச் சேவைத் துறையில் தீவிரமாக பங்களித்து வருகிறது.

பல்வேறு விலைமதிப்புகளுடன் தங்கள் தயாரிப்புகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் நுண், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வணிகங்களுக்கு இந்தச் சேவை கிடைப்பதால், டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதற்கான அவற்றின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு இது இடமளிக்கின்றது. Mastercard கொடுப்பனவு நுழைமுகமானது, நுண்-வணிகங்கள் வழக்கமான முறையில் பரிவர்த்தனை செய்யும் தளங்கள் மூலம் கொடுப்பனவுகளை மேற்கொள்வதை ஏற்கும். இது ஒவ்வொரு வணிகத்திற்கும் சேவை வழங்குவதை பிரத்தியேகமாக வடிவமைத்துக் கொள்ள வங்கிக்கு இடமளிப்பதுடன், வசதியாக பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் அதே வேளையில் உள்ளார்ந்த இடர்களை இறுக்கமாக கட்டுப்படுத்தி நிர்வகிக்க வழிவகுக்கும்.

DFCC வங்கியால் கொடுப்பனவு நுழைமுக சேவை அமுல்படுத்தப்படுவது தொடர்பில் DFCC வங்கியின் சில்லறை வங்கிச் சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைப் பிரிவுகளுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட கருத்து வெளியிடுகையில், “அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், பரந்த அளவிலான கொடுப்பனவுத் தெரிவுகளுடன் நம்பகமான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் கொடுப்பனவு உள்கட்டமைப்புக்கான முக்கிய தேவை இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மின் வர்த்தகச் சேவைகளுக்கு இடமளிக்க எங்கள் வணிகர் வலையமைப்பிற்கு வலுவூட்டுவதற்காக, மிகவும் பிரபலமான கொடுப்பனவுச் செயலிகளில் ஒன்றாக இருக்கும் Mastercard கொடுப்பனவு நுழைமுக சேவைகளுடன் இந்த ஒத்துழைப்பில் நாங்கள் காலடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இது வாடிக்கையாளர்கள், தொழில்துறை கூட்டாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சௌகரியத்தைக் கொடுக்கும் என்றும், இலங்கை முழுவதும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தவும் உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்பின் மூலம், DFCC வங்கியானது, சேவை வழங்குநர்களுடன் கூட்டுசேர்வதன் மூலமும், வளர்ந்து வரும் சந்தைப் பிரிவுகளில் ஊடுருவுவதன் மூலமும் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Mastercard இன் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளரான சந்துன் ஹபுகொட, “DFCC வங்கியுடன் ஒத்துழைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது வணிகர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்வதற்கும், டிஜிட்டல் வழிமுறை கொடுப்பனவுகளின் புதிய உலகில் போட்டித்திறனை மேம்படுத்துவதற்கு அவர்களின் அணுகல் மற்றும் பாதுகாப்பிலிருந்து பயனடைவதற்கும் உதவுகிறது. Mastercard நிறுவனத்தில், வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற, பாதுகாப்பான மற்றும் அட்டையை உட்புகுத்தும் எந்திரத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையற்ற அனுபவத்தை வழங்கும் சிறந்த வகுப்பிலான தீர்வுகள் மற்றும் கொடுப்பனவு முறைகளை அறிமுகம் செய்வதில் நாம் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .