2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

DFCC வங்கி புதிய-இயல்பு சூழலில் தனித்துவமான இயக்கம்

S.Sekar   / 2022 ஏப்ரல் 11 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

DFCC வங்கி, தொற்றுப் பரவல் காரணமாக எழுந்துள்ள பல சவால்களுக்கு மத்தியிலும், தன்னுடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பதற்கும், வர்த்தகத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள முயற்சிகள், தள மேடைகள் மற்றும் ஈடுபாட்டுச் செயற்பாடுகளை உள்ளடக்கிய பல்நோக்கு முயற்சியில் உள்ளடங்கிய பெறுமதியைத் தோற்றுவிக்கும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

DFCC வங்கியானது உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளதுடன், புதிய இயல்பு விதிமுறைகளுக்கு ஏற்ப ஊழியர்களின் நலன் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. சமூக-பொருளாதார நிச்சயமின்மை நிலவுகின்ற காலகட்டத்தில் நாட்டிற்கு உதவுவதில் கவனம் செலுத்தும் வகையில் அனைத்து மட்டங்களையும் உள்ளடக்கிய பல்வேறு சமூக முதலீடுகள் மற்றும் ஈடுபாடுகளை வங்கி உருவாக்கி செயல்படுத்தியது. அத்துடன், வங்கியின் வாடிக்கையாளர் வலுவூட்டல் தொடர்பான முயற்சிகள், நிதிச் சலுகைகள் மற்றும் விசேட டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளால் உருவாக்கப்பட்ட கணிசமான பொருளாதார மதிப்பையும் வெளிக்காண்பித்தது. தொற்றுநோயால் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக முன்னர் ஒருபோதும் முகங்கொடுத்திராத சவால்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக வணிகத்தை முன்னெடுத்தல் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நிலைபேறான மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் தேவைப்படுவதால், DFCC வங்கி அனைத்து நடவடிக்கைகளின் மையத்திலும் புத்தாக்கத்தை உறுதி செய்தது.

வங்கியானது கொவிட்-19 தொற்றுநோயின் பின்னணி மற்றும் பொது முடக்கத்தின் மூலமாக ஏற்பட்ட சமூக-பொருளாதார தாக்கத்தின் தீவிரம் மற்றும் கொடிய ஆட்கொல்லி வைரஸ் பரவல் ஆகியவற்றுக்கு மத்தியிலும்,  அனைத்து உள் மற்றும் வெளிப்புற பங்குதாரர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான அதன் விரிவான, பன்முகப்படுத்தப்பட்ட அணுகுமுறையுடன், திறமையான செயல்பாட்டை உறுதிசெய்து, வாடிக்கையாளர்களுக்கான சௌகரியத்தில் உயர்ந்த மட்டங்களை உறுதிப்படுத்தியமைக்காக இலங்கை பட்டய தொழில்முறை முகாமையாளர்கள் நிலையத்தால் 'புதிய இயல்புநிலையில் வணிகத்தினை மீள முன்னெடுத்தல்: சிறந்த முகாமைத்துவ நடைமுறைகள்’ என்ற பிரிவில் முதல் 10 நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளது.

சமூக மற்றும் பொருளாதார பெறுமதியைத் தோற்றுவிக்க முயற்சிக்கும் போது வணிக தொடர்ச்சி மற்றும் பங்குதாரர்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் நோக்கத்துடன், மனித வளத்தை மையமாகக் கொண்ட, செயல்பாட்டு ரீதியான, வணிகத்தை மையமாகக் கொண்ட மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த முயற்சிகளை இந்த நடைமுறைகள் உள்ளடக்கியுள்ளன.

வங்கியின் அணுகுமுறை குறித்து DFCC வங்கியின் பணிப்பாளரும் / தலைமை நிர்வாக அதிகாரியுமான, திமால் பெரேரா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நாங்கள் வணிக நடவடிக்கைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் போது, மீளவும் எழுச்சி காண்பதற்கான எங்களின் விரிவான முயற்சிகள், இலங்கை பட்டய தொழில்முறை முகாமையாளர்கள் நிலையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அங்குரார்ப்பண ‘Back to Business’ விருதுகளில் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அனைவருக்கும் ஏற்ற வங்கியாகவும், இலங்கையின் முதன்மையான வர்த்தக வங்கிகளில் ஒன்றாகவும் திகழும் DFCC வங்கியின் விரிவான அணுகுமுறை, அதனால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, எதிர்காலத்தை நோக்கிய நிலைபேற்றியல் மூலோபாயத்தின் பக்கபலம் ஆகியன வங்கியுடன் ஈடுபட்டுள்ள பல பங்குதாரர்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதில், அனைவருக்கும் வலுவூட்டி, அனைவருக்கும் தாராளமான அளவில் சமூக மற்றும் பொருளாதார பெறுமதியைத் தோற்றுவித்து, குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளது,” என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .