2025 மே 08, வியாழக்கிழமை

DFCC வங்கியின் பல கிளைகள் இடமாற்றம்

S.Sekar   / 2022 மே 30 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

DFCC வங்கி தனது அளுத்கம, காத்தான்குடி, அக்கரைப்பற்று, நுகேகொடை மற்றும் நாவுலவில் அமைந்துள்ள கிளைகளை இடமாற்றம் செய்துள்ளது. புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட கிளைகள் முறையே அந்தந்த கிளைகளின் நீண்டகால வாடிக்கையாளர்கள், DFCC வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்டுள்ளன.  

இதன்படி, DFCC அளுத்கம கிளையானது தற்போது இல. 39/A, வெலிபென்ன வீதி, அளுத்கம என்ற முகவரியிலும், DFCC காத்தான்குடி கிளையானது இல. 97, புதிய கல்முனை வீதி, ஆரையம்பதி என்ற முகவரியிலும் மற்றும் DFCC அக்கரைப்பற்று கிளையானது தொகுதி 02, MBS கட்டடம், அம்பாறை வீதி, அக்கரைப்பற்று என்ற முகவரியிலும் அமைந்துள்ளன. DFCC வங்கியின் நுகேகொடை கிளை தற்போது இல. 24, நாவல வீதி, நுகேகொடை என்ற முகவரியிலும், DFCC வங்கியின் நாவுல கிளையானது இல. 137, குருநாகல் - தம்புள்ளை வீதி, நாவுல என்ற முகவரியிலும் அமைந்துள்ளன.

இந்தக் கிளைகளின் இடமாற்றம் குறித்து DFCC வங்கியின் சில்லறை வங்கிச்சேவை மற்றும் சிறிய, நடுத்தர அளவிலான தொழில் முயற்சிப் பிரிவுகளுக்கான சிரேஷ்ட பிரதித் தலைமை அதிகாரியான ஆசிரி இதமல்கொட அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “அனைவருக்கும் ஏற்ற வங்கி என்ற வகையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த மதிப்பை வழங்கும் முகமாக, சேவையின் தரம், சௌகரியம் மற்றும் இலகுவாக கிடைக்கும் தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளின் தேடலில் நாம் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம். நுகேகொடை, அளுத்கம, ஆரையம்பதி, நாவுல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் வலுவான மற்றும் வளர்ச்சி கண்டு வரும் வாடிக்கையாளர் தளத்துடன், இந்த கிளைகளுக்கு வங்கிச் சேவைகளை மேற்கொள்ள வருகை தரும் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தப் பகுதிகளில் உள்ள எங்கள் கிளை நடவடிக்கைகளை மிகவும் விசாலமான, நவீன மற்றும் சௌகரியமான இடங்களுக்கு மாற்ற வேண்டிய அவசியத்தை நாங்கள் உணர்ந்தோம். எனவே, இந்த கிளைகளை இடமாற்றம் செய்வதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், சௌகரியத்துடனான வங்கிச்சேவை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையின் அடுத்த கட்டத்தை அனுபவிக்க இந்த பிராந்தியங்களில் உள்ள எமது புதிய அமைவிடங்களுக்கு வருகை தருமாறு பொதுமக்களை அழைக்கிறோம்,” என்று குறிப்பிட்டார்.

புதிதாக இடமாற்றம் செய்யப்பட்ட DFCC வங்கியின் அனைத்துக் கிளைகளும் நவீன வசதிகள், தாராளமான வாகன தரிப்பிட வசதி மற்றும் DFCC வங்கியின் நிதியியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான அணுகல் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இந்த புதிய அமைவிடங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களின் சௌகரியத்திற்காக சமீபத்திய சுய-வங்கிச்சேவை தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளதால், அவர்கள் தங்கள் நிதியை 24 மணி நேரமும் அணுக முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X