2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

DFCC வங்கியின் மற்றுமொரு ATM/CRM

S.Sekar   / 2022 மே 02 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

DFCC வங்கி, தனது 25 ஆவது வெளியக ATM/CRM ஐ பனாகொட, டெம்பிள்பேர்க் தொழிற்பேட்டை வளாகத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வில் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டதுடன், டெம்பிள்பேர்க் தொழிற்பேட்டையைச் சேர்ந்த அதிகாரிகளும், தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களும் அடங்கியிருந்தனர். இந்த வலயத்தில் 34 நிறுவனங்கள் மற்றும் 5000 க்கும் அதிகமான ஊழியர்கள் காணப்படும் நிலையில், இந்த அமைவிடத்திலிருந்து 3 கிலோமீற்றர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கும் அனுபவிக்கக்கூடிய வகையில் இந்த ATM/CRM சேவை அமைந்துள்ளது. நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளதுடன், சௌகரியமான முறையில் தமது டிஜிட்டல் நிதிச் சேவைகளை பொது மக்களுக்கு பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வெளியக ATM/CRM வசதி நிறுவப்பட்டுள்ளமை தொடர்பில் வாடிக்கையாளர் மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர் வங்கிச் சேவைகள் பிரிவின் தலைமை அதிகாரியும், சிரேஷ்ட உப தலைருமான ஆசிரி இத்தமல்கொட கருத்துத் தெரிவிக்கையில், “டெம்பிள்பேர்க் தொழிற்பேட்டையில் 34 நிறுவனங்கள் காணப்படுவதுடன், அதில் ஆயிரக்கணக்கானவர்கள் பணியாற்றுகின்றனர். நிதிச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதிலும், பணச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதிலும் பலர் பல்வேறு விதமான அசௌகரியங்களை எதிர்நோக்குவதை நாம் புரிந்து கொண்டோம். மேலும், வங்கிச் சேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இந்த ஊழியர்கள் குறுகிய விடுமுறையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டமை தொடர்பிலும் எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. எனவே, அனைவருக்குமான வங்கிச் சேவைகளை வழங்கும் வங்கி எனும் வகையில், டிஜிட்டல் மற்றும் பண வங்கிச் சேவைகளை சௌகரியமான முறையில் வழங்குவது மாத்திரமன்றி, 2030 ஆம் ஆண்டுக்கான எமது நிலைபேறாண்மை இலக்குகளின் பிரகாரம், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் நாம் அவதானித்திருந்தோம். எனவே, இந்த வலயத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்கும், இப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கும் வலுவூட்ட முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது புதிய வெளியக பண வைப்பு ஆற்றலுடனான ATM மற்றும் டிஜிட்டல் கொடுப்பனவு kiosk ஆன “Pay & Go“ ஆகியன அவர்களுக்கு பயனளிப்பதாக அமைந்திருக்கும். எமது முன்னணி பரிபூரண டிஜிட்டல் பண முகாமைத்துவ தீர்வான DFCC iConnect மற்றும் இதர சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைக்கான வங்கியியல் தீர்வுகள் போன்றவற்றினூடாக வியாபாரங்களுக்கு நாம் கைகொடுத்த வண்ணமுள்ளோம்.” என்றார்.

DFCC வங்கியின் புதிய வெளியக வசதிகளில், நவீன வசதிகள் படைத்த CRM இயந்திரமும் அடங்கியுள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் எந்தவொரு வங்கிக் கணக்கிலிருந்தும் பணத்தை மீளப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், DFCC வங்கிக் கணக்குகளுக்கு பண வைப்புகளை மேற்கொள்ளவும் முடியும். மேலும், DFCC வாடிக்கையாளர்களுக்கு கார்ட் மற்றும் கார்ட் இல்லாத கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியும், DFCC கடனட்டைகளுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. CRM இயந்திரத்துக்கு மேலதிகமாக, DFCC வங்கியினால் Pay and Go இயந்திரமொன்றும் நிறுவப்பட்டுள்ளதுடன், அதனூடாக பொது மக்களுக்கு இலகுவான முறையில் டிஜிட்டல் மொபைல் ரீலோட்கள், கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் மற்றும் காப்புறுதி, லீசிங் போன்ற நிறுவனசார் கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும் முடியும். மொபைல் ரீலோட் வசதியினூடாக, சகல வலையமைப்பு சேவை வழங்குநர்களின் இணைப்புகளுக்கும் ரீலோட் செய்து கொள்ள முடியும் என்பதால், பணியாளர்களுக்கு பெரும் சௌகரியமானதாக அமைந்துள்ளது. அருகாமையிலுள்ள ரீலோட் செய்யும் நிலையம், இந்த வலயத்திலிருந்து 1 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருப்பதால், இந்த வசதி அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. வலயத்தைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஏனையவர்களுக்கு தற்போது DFCC வங்கியின் Salary Partner அல்லது Salary Plus போன்ற சம்பளக் கணக்குகளை இலகுவாக ஆரம்பித்துக் கொள்ள முடியும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .