Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 27 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
DHL Global Forwarding நிறுவனம், இலங்கையின் மருந்து உற்பத்திகள் மற்றும் இறக்குமதியாளர்களின் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சேவையை உறுதி செய்யும் வகையில் கொழும்பில் அதன் முதலாவது வாழ்க்கை அறிவியல் மையத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.
2-8°C வரையான வெப்பநிலை கொண்ட குளிர்ச்சியான அறை உள்ளடங்கலாத் தன்னியக்க வெப்பநிலை கண்காணிப்பு கொண்ட இந்த புதிய வசதியின் மூலம் இலங்கையின் மருந்தக கம்பனிகளுக்கு மருந்துப்பொருள் களஞ்சியசாலை மற்றும் விநியோகத்துக்கான உயர் கட்டுப்பாட்டுடன் கூடிய சூழல் வழங்கப்படுகிறது.
“இந்தப் புதிய நிலையத்தின் மூலமாக, இலங்கையின் மருந்தக கம்பனிகளுக்கு களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக செயன்முறையின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் உற்பத்தி ஆபத்தினை சமாளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், தங்களது உற்பத்திகளை சந்தையில் எவ்வாறு வினைத்திறனுடன் தயார்படுத்துவது குறித்த வசதிகளும் வழங்கப்படுகின்றன. இதற்கமைய, இலங்கையில் வளர்ந்துவரும் தனியார் சுகாதார பராமரிப்புச் சந்தையில் தம்மை முன்னணி வழங்குநராக நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மருந்து உற்பத்தியாளர்களின் தரத்தை உறுதிப்படுத்துவதோடு குறைந்த நேரத்தில் உயர்தரமான உற்பத்திகளை விநியோகம் செய்ய முடியும்” என ஆசிய மற்றும் தெற்காசியாவின் DHL Global Forwarding நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தோமஸ் டீபர் தெரிவித்தார்.
இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய வசதியுடன், வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதார பராமரிப்பு துறையில் மிகச்சிறந்த உட்கட்டுமானத்துடன், உள்நாட்டு மருந்து கேள்விகளுக்கான சேவைகளை வழங்கவுள்ளதுடன், உலக மேடையில் மருந்துப்பொருள் பாதுகாப்பு மற்றும் சந்தை நிரம்பல் ஆகியவற்றில் அவர்களை சந்தை முன்னோடியாக திகழ வழிவகுத்துள்ளோம். களஞ்சியப்படுத்தல் மற்றும் உள்நாட்டு விநியோகத்துடன், வாழ்க்கை அறிவியல் நிலையமானது லேபளிங், விலை குறியிடல் மற்றும் மருந்துப் பொருட்களை பொதியாக்குதல் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளையும் வழங்கி வருகிறது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago