2025 மே 20, செவ்வாய்க்கிழமை

DSI சுப்பர்ஸ்போட் சரியான தெரிவை மேற்கொள்ளுங்கள்

Editorial   / 2019 ஜனவரி 06 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை நகரில் DSI காட்சியறை ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வுடன் தமது பண்டிகைக் கால விற்பனை ஊக்குவிப்பு செய‌ற்றிட்டமான, ‘சரியான தெரிவை மேற்கொள்ளுங்கள்’ என்ற தொனிப்பொருளையும் அறிமுகம் செய்திருந்தது.

இந்த நிகழ்வு, D சம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துசித ராஜபக்‌ஷவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.   

ஓய்வுபெற்ற தலைவர் தேசமான்ய நந்ததாச ராஜபக்‌ஷ, D சம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. கௌசல்யா பெரேரா,  D சம்சன் அன்ட் சன்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அசங்க ராஜபக்‌ஷ ஆகியோர் இதில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

இந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், DSI சுப்பர்ஸ்போட் பாணந்துறை பகுதி பாடசாலை மாணவர்களுக்கு புத்தம் புதிய பாதணிகளைப் பரிசாக வழங்கியிருந்தது.  

DSI பாடசாலைப் பாதணிகள் 1962ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. பாடசாலை பாதணிகளைக் கொள்வனவு செய்வதில் காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வாக இது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. சமூகப் பெறுமானங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், செயற்பாட்டுடன் கூடிய சக்திமிக்கதோர் இளம் சமுதாயத்தை, தன்னம்பிக்கையுடன் தரமுயர்த்துவதற்கு அவர்களது பாடசாலைச் சீருடைக்கு சிறந்ததொரு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதே அன்றும், இன்றும் இந்த வர்த்தகப் பெயரின் தொலைநோக்காகக் காணப்பட்டு வருகின்றது.  

ஓர் உள்நாட்டு வர்த்தகப் பெயர், மிகச் சிறந்த தரத்திலான உற்பத்தி, புதிய நாகரிகங்களுடன் இணைந்து செயற்படும் தன்மை, எங்கும் கிடைக்கிறது, வசதிமிக்கது, ஒற்றுமையானது, பாதுகாப்பானது, சௌகரிகமானது, கவனிப்பையும் நம்பிக்கையையும் நாணயத்தையும் கொண்டுள்ளமை என்பனவே இந்தப் பெறுமானங்களை DSI சுப்பர்ஸ்போட் கொண்டிருக்கக் காரணமாகும்.  

இவற்றின் காரணமாக, DSI சுப்பர்ஸ்போட், ஏனைய உற்பத்திகளில் இருந்து வேறுபட்டுக் காணப்படுகிறது. மிகத் தேவையான, ஆனால் எளிதில் கிடைத்திடாத குணாதிசயங்களாகிய நீண்டகால பாவனை, சிறந்த பொதி அமைப்பு, பல்வேறு வடிவங்களில் கிடைத்தல், நியாயமான விலை, மிகச் சிறந்த வாடிக்கையாளர் சேவை, சமூகப் பொறுப்பு என்பன இதன் முக்கிய அம்சங்களாகும்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X