2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

DSI விநியோகஸ்தர் மாநாடு

Gavitha   / 2016 ஜூன் 14 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

D.சம்சன் அன்ட் சன்ஸ் (தனியார்) நிறுவனம், இவ்வாண்டின் தனது முதலாவது விநியோகஸ்தர் மாநாட்டை அண்மையில் புத்தளத்தில் நடத்தியது. 'வெற்றிக்கான ஓட்டம்' எனும் தலைப்பில் அண்மையில் இந்நிகழ்வு சிலாபம் கரோலினா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. சிறந்த சேவைகளை வழங்கிய 102 பிரதிநிதிகள் இதில் பங்கேற்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படவுள்ள இத்தகைய நிகழ்வுகளின் ஒரு அங்கமாகவே இது இடம்பெற்றது.

இந்நிகழ்வின் மிகப் பிரதானமான நோக்கம், புத்தளம் மாவட்டத்தில் உள்ள நிறுவனத்தின் விநியோக வர்த்தகப் பங்காளிகளின் சேவைகளை கௌரவித்து அங்கிகரிப்பதாகும். மிக முக்கிய நிகழ்வாக, அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கியமைக்காக பத்து விநியோகஸ்தர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மாநாட்டின் ஒரு அங்கமாக, குழு நிலை கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விநியோகஸ்தர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளும் இங்கு ஆராயப்பட்டன. அவர்களின் கருத்துக்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஆலோசனைகள் செவிமடுக்கப்பட்டன. DSI க்கும் அதன் விநியோகஸ்தர்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இவை அமைந்திருந்தன.

D.சம்சன் அன்ட் சன்ஸ் (தனியார்) நிறுவனத்தின் பணிப்பாளர் கௌஷல்ய பெரேரா, பிரதம செயற்பாட்டு அதிகாரி றுவன் கன்னங்கர மற்றும் முகாமைத்துவ பீட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விற்பனை, சந்தைப்படுத்தல் பிரிவு அதிகாரிகள், நிறுவனத்தின் பங்காளிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

DSI உற்பத்தி வரிசையின் புதிய வரவுகளை அறிமுகம் செய்யும் வகையில், கண்ணைக் கவரும் பெஷன்ஷோ ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவற்றுள் பல விற்பனைப் பங்காளிகளுக்கு அறிவூட்டும் வகையில் அமைந்திருந்தன. னுளுஐ உற்பத்தி வரிசைகள் பற்றிய மேலதிக புரிந்துணர்வை அவர்கள் இதன் மூலம் பெற்றுக் கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X