Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 11 , பி.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
Douglas & Sons (Pvt) Ltd (DSL) நிறுவனம் Continental AG நிறுவனத்துடன் இணைந்து Continental டயர்களுக்கான தமது அங்குரார்ப்பண முகவர் மாநாட்டை அண்மையில் “வோட்டர்ஸ் எட்ஜ்” நிகழ்வு மண்டபத்தில் பெருமையாக நடாத்தியுள்ளது. பிரயாணிகள் மோட்டர் கார் டயர் பிரிவு மற்றும் டிரக் டயர் பிரிவு ஆகியவற்றில் 2015ஆம் ஆண்டில் மிகச் சிறந்த விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய முகவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரத்தையும், விருதுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது.
மைக்கேல் டோமன் (தூதரக துணைத் தலைமை அதிகாரி - இலங்கைக்கான ஜேர்மன் தூதரகம்), ஹெகார்ட் ட்ரம்பர் (இலங்கைக்கான ஜேர்மன் தூதுவரின் முதன்மைச் செயலாளர்) மற்றும் சரோஜ் பெரேரா - DSL நிறுவனங்கள் குழுமத்தின் பணிப்பாளர் சபைத் தலைவர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். Continental PCR மற்றும் TBR அணியிலிருந்து முக்கிய அதிகாரிகள், மிகச் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய DSL 100 Continental Tyre முகவர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட DSL பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை இன்னும் விமரிசையாக மாற்றியமைத்திருந்தனர்.
ஆசிய பசுபிக் பிராந்தியதுக்கு என விசேடமாக வடிவமைக்கப்பட்ட Ultra Contact UC 6 மற்றும் Comfort Contact CC 6 ஆகிய 6வது தலைமுறை உற்பத்திகளின் இரு புத்தம்புதிய, சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட உற்பத்திகளை பிரயாணிகள் கார் டயர்கள் பிரிவு (PCR) அறிமுகப்படுத்தி வைத்தமை DSL மற்றும் Continental Tyres ஆகிய இரு நிறுவனங்களுக்கும் மிகச் சிறப்பான ஒரு நிகழ்வாகவும் இது அமையப்பெற்றது.
இப்புதிய அறிமுகங்கள் குறுகிய ஈர நிறுத்த தூரத்துடன் மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் பல சௌகரியங்களுடன் வெளிவந்துள்ளன. 6 ஆவது தலைமுறை உற்பத்திகளின் அறிமுகமானது, ஆசிய பசுபிக் பிராந்தியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு வாகனத்தை செலுத்துவதில் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில் தொழில்நுட்பத்திற்கு மீள்வரைவிலக்கணம் கொடுக்கும் Continental Tires நிறுவனத்தின் இடைவிடாத அர்ப்பணிப்பை காண்பிக்கின்றது.
BU Replacement APAC PLT பிராந்திய விற்பனைகளுக்கான பணிப்பாளரான கீ செங் சூங் கருத்துத் தெரிவிக்கையில், வர்த்தகநாமம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அதிசிறந்த உற்பத்தித் தரத்தை விநியோகிப்பதுக்காக நீட்டித்த சோதனை ஆய்வுகளை முன்னெடுத்து, 6ஆவது தலைமுறை உற்பத்திகளை அபிவிருத்தி செய்வதற்காக அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி மீது Continental பாரிய அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கார் சாரதிகளின் தேவைகள் மற்றும் வாகனம் செலுத்தும் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் ஆழமான புரிதல்களின் அடிப்படையிலேயே Ultra Contact 6 (UC6) மற்றும் Comfort Contact 6 (CC6) ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன.
50 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago