2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

Eco Hauler e-bike carts களுடன் Lumala புரட்சி

Freelancer   / 2024 பெப்ரவரி 23 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று தசாப்த காலத்துக்கு அதிகமான நிலைபேறான அர்ப்பணிப்புடன் இயங்கும் Lumala, இலங்கையின் சைக்கிள் துறையில் சூழலுக்கு நட்பான புத்தாக்கமான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கி வருகின்றது. நிறுவனத்தின் பரந்தளவு தயாரிப்புகளில் Lumala இன் அர்ப்பணிப்பு வெளிப்படுவதாக அமைந்திருப்பதுடன், சாகச அனுபவத்தை நாடுவோருக்கான மவுன்டன் சைக்கிள்கள் முதல் தினசரி நகர்களில் பயணிப்பதற்கு உகந்த சாதாரண சைக்கிள்கள் வரை தன்வசம் கொண்டுள்ளது.

இலங்கையர்கள் மத்தியில் சூழல்சார் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும், செயற்திறனுடனான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கவும் Lumala தன்னை அர்ப்பணித்துள்ளது. புத்தாக்கமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் Lumala, சர்வதேச நிலைபேறாண்மை எனும் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் சூழலுக்கு நட்பான தீர்வுகளை வடிவமைப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்த அர்ப்பணிப்பானது, ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளில் Lumala வின் தலைமைத்துவத்தை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளதுடன், சூழல் வழிநடத்தலில் எமது ஈடுபாட்டையும் உறுதி செய்துள்ளது.

புத்தாக்கம் மற்றும் சூழல் வழிநடத்துல்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான எடுத்துக்காட்டாக Eco Hauler இன் அறிமுகம் அமைந்துள்ளது. இந்த புதிய e-bike cart இனூடாக, இலங்கையில் சுமார் நாளாந்த பிளாஸ்ரிக் கழிவு உற்பத்தி சுமார் 938 மெட்ரிக் டொன்களாக காணப்படும் நிலையில், வெறும் 4 சதவீதம் மட்டுமே மீள்சுழற்சிக்குட்படுத்தப்படும் நிலையில், கழிவு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அவசர பிரச்சனைகளுக்கு தீர்வு காண எதிர்பார்க்கப்படுகின்றது. USAID Clean Cities, Blue Ocean (CCBO) நிகழ்ச்சித்திட்டத்துடன் கைகோர்த்து, Eco Hauler முன்னெடுப்பினூடாக கடல் பிளாஸ்ரிக் கழிவு மாசுக்கு எதிராக போராட எதிர்பார்க்கப்படுகின்றது. அதனூடாக காலநிலை மாற்றம் தொடர்பில் தீர்வு காண்பதற்கும், கழிவு சேகரிப்பை வினைத்திறனான முறையில் நகரங்களிலும் கரையோரப் பகுதிகளிலும், ஆற்றோரங்களிலும் முன்னெடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

சகாயத்தன்மை, குறைந்த செயற்பாட்டு செலவுகள், உயர் கொள்ளளவுத் திறன் மற்றும் சூழலுக்கு நட்பான வடிவமைப்பு போன்ற அம்சங்களைக் கொண்ட Eco Hauler இனால், நிலைபேறாண்மை தொடர்பில் Lumala காண்பிக்கும் ஒட்டுமொத்த செயற்பாடு பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை முழுவதிலும் கழிவு முகாமைத்துவ செயன்முறையை மேம்படுத்துவதற்கும், Eco Hauler இன் தாக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவும், மாநகர சபைகள், சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு சமூக பங்காளர்களுடன் பங்காண்மையை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.

Lumala பிரதம நிறைவேற்று அதிகாரி தாரிக் மிஃவ்லால் கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கமான தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்கு என்பதற்கு அப்பால் சென்று இயங்குவதாக Lumala அமைந்திருப்பதுடன், நிலைபேறான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துகின்றது. சூழல் நிலைபேறாண்மைக்கான எமது அர்ப்பணிப்பை Eco Hauler வெளிப்படுத்துவதுடன், தூய, பசுமையான புவிக்கு வழிகோலுவதாக அமைந்துள்ளது.” என்றார். ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளை வழங்குவதில் முன்னோடி மற்றும் சூழலுக்கு நிலைபேறாண்மையை ஊக்குவிப்பது ஆகியவற்றில் Lumala இன் நிலையை இது உறுதி செய்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .