2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

Ex-pack இன் 25 வருட கால வளர்ச்சி மற்றும் சிறப்பு

S.Sekar   / 2022 மார்ச் 25 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

Ex-pack Corrugated Cartons PLC, உள்நாட்டிலும் சர்வதேச சந்தைகளையும் சேர்ந்த புகழ்பெற்ற நிறுவனங்களுக்கு பொதியிடல் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாகத் திகழ்வதுடன், தொடர்ந்தும் பல சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும் சிறப்பான முன்னேற்றம் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றினூடாக தனது 25 வருட பூர்த்தியை வெற்றிகரமாகக் கொண்டாடுகின்றது. இந்நிறுவனம் தொடர்ந்தும் உறுதியான வளர்ச்சியைப் பதிவு செய்த வண்ணமுள்ளது.

இதனைக் குறிக்கும் வகையில், Ex-pack இனால் அதன் நவீன வசதிகள் படைத்த தொழிற்சாலை வளாகத்தில் சகல ஊழியர்களின் பங்கேற்புடன் விசேட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது ஊழியர்களுக்கு பெறுமதியான அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய பொதியொன்று அவர்களின் குடும்பத்தாருக்காக வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் அதிகளவு விரும்பப்படும் அலைவுநெளிவுள்ள பொதியிடல் தயாரிப்புகள் விநியோகத்தராக Expack ஐ உயர்த்துவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்த சகல பங்காளர்களுக்கும் Expack இன் தவிசாளர் சத்தார் காசிம் தமது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

1997 ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த Ex-pack, படிப்படியாக தனது செயற்பாடுகளை விஸ்தரித்திருந்ததுடன், தொடர்ச்சியாக சாதனைமிகுந்த உற்பத்திகளை பதிவு செய்திருந்ததுடன், இலங்கையின் அலைவுநெளிவுள்ள பொதியிடல் தொழிற்துறையில் முன்னணி நிறுவனமாக தன்னை தரமுயர்த்தியுள்ளது. உள்நாட்டு சந்தையிலும், ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய சர்வதேச நாடுகளுக்கும் Expack சேவைகளை வழங்குகின்றது. இலங்கையில் காணப்படும் சிறந்த அலைவுநெளிவுள்ள பொதியிடல் தீர்வு தயாரிப்பாளராக PUM நெதர்லாந்தினால் பிரேரிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் Ex-pack பல விருதுகளையும் கௌரவிப்புகளையும் பெற்றிருந்தது. இவற்றில், ஏற்றுமதியாளர்களுக்கான சிறந்த சேவை வழங்குநர்கள் (பாரிய பிரிவு) என்பதற்கான NCE தங்க ஏற்றுமதி விருது, CNCI சிறந்த 10 விருது (மேலதிக பெரிய பிரிவு), NCCSL-தேசிய வியாபார சிறப்பு விருதுகள் அடங்கலாக, லங்கா ஸ்டார் “புத்தாக்கமான பொதியிடல்” விருது, லங்கா CSR விருதுகள் மற்றும் கிறீன் விருதுகள் போன்றன அடங்குகின்றன. ISO 9001-2015, ISO 14001-2015, FSC COC மற்றும் WRAP (Worldwide Responsible Accredited Production) சான்றைப் பெற்ற நிறுவனமாக Expack அமைந்துள்ளது.

Ex-pack இல் பேணப்படும் சிறந்த பணியிட கலாசாரம் என்பது பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் போன்ற பெறுமதிகள் மற்றும் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்துள்ளதாக தவிசாளர் சத்தார் காசிம் குறிப்பிட்டார். நிறுவனத்தின் ஊழியர்களுக்கு முன்னுரிமையளிக்கும் திட்டங்களினூடாக, அதன் 300 க்கும் அதிகமான உறுதியான பணியாளர்கள் பல்வேறு வழியில் ஊக்குவிக்கப்பட்டுள்ளதுடன், வலுவூட்டப்பட்டுள்ளனர். நிறுவனத்தில் பேணப்படும் திறந்த கதவு கொள்கையினூடாக, எந்தவொரு ஊழியரும் எந்நேரத்திலும் முன்வந்து எந்தவொரு விடயம் பற்றியும் கலந்துரையாடக்கூடிய பணிச்சூழல் பேணப்படுகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகளினூடாக, தொடர்ச்சியான மூன்று வருடங்களாக ஆசியாவில் பணியாற்றுவதற்கு சிறந்த பணியிடங்களில் ஒன்று எனும் தரப்படுத்தலை Ex-pack க்கு பெற்றுக் கொள்ள முடிந்தது. அத்துடன் இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக நான்காவது தடவையாகவும் கடந்த ஆண்டில் Great Place to Work இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. நெருக்கடியான காலப்பகுதிகளில் சகல ஊழியர்களாலும் வெளிப்படுத்தப்பட்டிருந்த அர்ப்பணிப்பு, பங்களிப்பு மற்றும் மீட்சியுடனான செயற்பாடுகள் போன்றவற்றுக்கு கிடைத்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளது.

தொடர்ச்சியாக புத்தாக்கமாக அமைந்திருப்பது எனும் நிறுவனத்தின் முயற்சிகளினூடாக, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தீர்வுகளை வழங்க முடிந்தது. ISO 9001-2015, ISO 14001-2015 மற்றும் FSC COC சான்றளிப்புகள் போன்றவற்றினூடாக தனது தரம் மற்றும் பாதுகாப்பு நியமங்களை சர்வதேச மட்டத்தில் பேணுகின்றமைக்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலைபேறாண்மை, பொறுப்பு வாய்ந்த உற்பத்தி மற்றும் சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் தனது ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கமைய, சபுகஸ்கந்த பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலைக்கு LEED மற்றும் காபன் நடுநிலை சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்வதற்கு co-energi எனும் கட்டட பொறியியல் ஆலோசனை நிறுவனத்துடன் Ex-pack கைகோர்த்திருந்தது.

பொதியிடல் சந்தையில் நிறுவனம் கொண்டுள்ள உறுதியான நிலையின் அடிப்படையில், கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் அண்மையில் நிறுவனத்தின் பங்குகள் பொதுப் பட்டியலிடப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .