2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

Expo 2020 துபாய் நிகழ்வில் ஜொலித்த இலங்கையின் மாணிக்கக்கல்

S.Sekar   / 2022 மார்ச் 28 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

துபாயில் இடம்பெறும் EXPO 2020 நிகழ்வில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ லங்கன் பெவிலியனினால், 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்த மாணிக்கக்கற்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ‘Day of Sapphires’ எனத் தலைப்பிடப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சகல வயதையும் சேர்ந்த விருந்தினர்கள் பங்கேற்றதுடன், அவர்களுக்கு இலங்கையின் மாணிக்கக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பு முறைகள் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக லண்டன் மற்றும் ஜெனிவாவில் Sotheby’s மற்றும் Christie’s இல் அனுபவங்களைக் கொண்டுள்ள புகழ்பெற்ற ஆபரணங்கள் நிபுணரான ஹெலென் மோல்ஸ்வேர்த் பங்கேற்றிருந்தார். விருந்தினர்களுக்கு விளக்கமளிக்கையில், இலங்கையின் மாணிக்கக்கற்கள், வர்த்தகம், அகழ்வு முறைகள், வெட்டல், தீட்டல் மற்றும் ஒட்டுமொத்த ஆபரணங்கள் தயாரிப்பு செயன்முறை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வினூடாக, சர்வதேச விற்பனைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன், ‘Ceylon Sapphire’ (நீல மாணிக்கம்), மாணிக்கக்கற்கள் மற்றும் ஆபரணங்கள் பிரிவில் இலங்கை கொண்டுள்ள உயர் தரம் வாய்ந்த மாணிக்கக்கற்கள் (மென் சிவப்பு, மஞ்சள், தங்கம் மற்றும் நட்சத்திர மாணிக்கக்கற்கள்) போன்றவற்றைப் பெறுவதற்கான முக்கியமான மூலமாக அமைந்திருப்பது என்பதுடன் உலகின் சிறந்த மாணிக்கக்கல் வெட்டல் மற்றும் தயாரித்தல் பகுதிகளில் ஒன்றாக அமைந்திருத்தல் போன்றவற்றை மேலும் மேம்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. சர்வதேச மட்டத்தில் இலங்கை கொண்டுள்ள உயர்ந்த ஸ்தானத்தை மேலும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில், உயர்-மட்ட சொகுசு சந்தையில் நிலவும் கேள்வியை நிவர்த்தி செய்யக்கூடிய உயர் திறன் படைத்த வடிவமைப்பாளர்கள் மற்றும் சர்வதேச தரம் வாய்ந்த மாணிக்கக்கல் சிற்பிகள் தம்மை தயார்நிலையில் வைத்துள்ளனர்.

உலகின் சிறந்த ஐந்து மாணிக்கக்கற்கள் வளத்தைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்று என இலங்கை அறியப்படும் நிலையில், நாட்டினுள் அதிகளவு அந்நியச் செலாவணியை பெற்றுக் கொடுக்கக்கூடிய தொழிற்துறையாக திகழ்வதற்கான உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும் முறையான தந்திரோபாய ரீதியான வளர்ச்சித் திட்டம் இன்மை மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கக்கூடிய கொள்கை காணப்படாமை போன்றன, துபாய், தாய்லாந்து மற்றும் ஹொங் கொங் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதன் முழுமையான திறனை எய்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

நாடு தொழிற்துறையுடன் கொண்டுள்ள சிறந்த வாய்ப்புகளைக் கவனத்தில் கொண்டு, கொள்கை வடிவமைப்பாளர்களால் 10 ஆண்டு காலப்பகுதிக்கான தந்திரோபாய அபிவிருத்தித் திட்டமொன்று வகுக்கப்பட்டு நிறைவேற்றப்படுமானால், இலங்கையின் நீல மாணிக்கக்கல் வர்த்தக நாமத்தை முன்னே கொண்டு செல்வதற்கு மாணிக்கக்கல் மற்றும் ஆபரணங்கள் சம்மேளனம் தன்னை அர்ப்பணித்துள்ளது. இந்தத் திட்டத்தின் அங்கமாக, Expo 2020 துபாய் போன்ற வெற்றிகரமாக அமைந்திருக்கும் சர்வதேச நிகழ்வுகளில் தொடர்ந்தும் பங்கேற்பதற்கு சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. மேலும், முன்னோர்கள் பேணி வந்த கீர்த்தி நாமத்தை தக்க வைத்து, ஆபரணங்கள் அலங்காரத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் இளம் வடிவமைப்பாளர்கள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு, அவர்களை நாட்டினுள் பேணுவதற்கு அவசியமான ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .