Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடனை மீள செலுத்துவதற்கான இயலுமையை அடிப்படையாகக் கொண்டு, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.
CCC தரத்திலிருந்து CC தரத்திற்கு சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால், இலங்கை பின்தள்ளப்பட்டுள்ளது.
வௌிநாட்டுக் கடன்களை மீள செலுத்துவதைத் தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதையே CC தரநிலை குறிக்கின்றது.
இலங்கை, அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பன்னாட்டு முறிகளை செலுத்த வேண்டியுள்ள பின்புலத்திலேயே, Fitch எனப்படும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனத்தினால் இலங்கை தரமிறக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர அடுத்த வருடம் ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் டொலர் பன்னாட்டு முறிகளையும் இலங்கை செலுத்த வேண்டியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
இலங்கை அடுத்த வருடத்தில் மாத்திரம் கடன் தவணை மற்றும் வட்டியாக 6.9 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டியுள்ளதாக, Fitch நிறுவனம் விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, இந்த வருடத்தின் நவம்பர் மாதத்தில் இலங்கையிடம் உள்ள வௌிநாட்டுக் கையிருப்பின் 430 சதவீதமாகும். இலங்கையின் வௌிநாட்டுக் கையிருப்பு 1.6 பில்லியன் டொலர் வரை தற்போது குறைவடைந்துள்ளது.
இலங்கைக்கு அந்நிய செலாவணி கிடைக்கும் வழிமுறைகள் மற்றும் காலம் தொடர்பில் தௌிவற்ற தன்மை நிலவுவதாக Fitch நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருதரப்பு மற்றும் பல்தரப்பு மூலங்களிலிருந்தும், குறை பயன்பாட்டுச் சொத்து ஊடாகவும் அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் போதியளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என, இலங்கை மத்திய வங்கி அண்மையில் வௌியிட்ட அரையாண்டு வழிகாட்டல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago