2024 மே 04, சனிக்கிழமை

Flora Tissues இன் 40 வருட பூர்த்தி

Freelancer   / 2023 செப்டெம்பர் 26 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மென்மையான, பயன்படுத்திவிட்டு அழித்துவிடக்கூடிய டிஷு கடதாசி தயாரிப்புகள் உற்பத்தியில் ஈடுபடும் இலங்கையில் பெருமைக்குரிய நாமமும், சந்தை முன்னோடியான புகழ்பெற்ற Flora டிஷு தயாரிப்புகளின் உற்பத்தியாளராகவும் திகழும் Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் (பிரைவட்) லிமிடெட், தனது 40 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையில் விசேட நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது, புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்வது தொடர்பான தனது தூரநோக்குடைய திட்டங்களை அறிமுகம் செய்திருந்ததுடன், துரிதமாக அதிகரித்து செல்லும் சவால்கள் நிறைந்த சந்தை சூழ்நிலையிலும் ஊழியர்களையும், விநியோகத்தர்களையும் அழைத்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தது.

2023 செப்டெம்பர் 9 ஆம் திகதி தனது 40 வருட பூர்த்தியைக் குறிக்கும் நிகழ்வை, கோல்டன் ரோஸ் பகுதியில் முன்னெடுத்திருந்தது. இதன் போது, நிறுவனத்தில் பணியாற்றும் விநியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை கௌரவித்திருந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் பலர் Flora டிஷுக்களுடன் இணைந்து தமது தொழில் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒன்று முதல் மூன்று தசாப்த கால அனுபவத்தைக் கொண்டிருந்த இவர்களுக்கு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரிடமிருந்து கௌரவிப்பு சின்னம் வழங்கப்பட்டிருந்தது.

நிறுவனத்துடனான தமது நீண்ட கால வரலாற்றுப் பயணத்தை சகல பங்குபற்றுநர்களும் நினைவுகூர்ந்ததுடன், Flora டிஷுக்களின் தங்க விழா பூர்த்தியை காண்பதற்கு தம்மை உறுதியாக அர்ப்பணித்துள்ளனர்.

நிகழ்வின் விசேட அதிதிகளில், இந்தியாவை தளமாகக் கொண்ட ஒரியன்ட் பேப்பர் மில்ஸ் பிரதிநிதிகளான தெபோஜித் சென்குப்தா மற்றும் அம்ரிந்தர் பத்ரா ஆகியோரும், இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் (ஆவணப்படுத்தல்கள் மற்றும் தகவல் சேவைகள்) திருமதி. ரி.எஸ். சேனாரட்னவும் அடங்கியிருந்தனர்.

1982 ஆம் ஆண்டின் முற்பகுதிகளில், பிரத்தியேக தூய்மை தீர்வை பெற்றுக் கொடுப்பதில் மாற்றத்துக்கான தேவை உணரப்பட்டிருந்தது. குறிப்பாக, இலங்கையர்கள் மத்தியில் பிரத்தியேக தூய்மைப் பழக்கத்தை மேம்படுத்துவதில் இந்த தேவை பெரிதும் உணரப்பட்டது. பணிப்பாளர்களின் சிந்தனையில் தோன்றிய எண்ணக்கருவின் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மென் டிஷு தயாரிப்புகளை உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அதனூடாக, அதிகளவு தேவையை கொண்டிருந்த பிரத்தியேக தூய்மை தயாரிப்புகளில் மென் டிஷு தயாரிப்புகள் 1983 ஆம் ஆண்டின் நடுப்பகுதி முதல் உற்பத்தி செய்பாடுகள் ஆரம்பத்துடன், உள்நாட்டு நுகர்வோருக்காகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு சேவைகளை வழங்கிய பல ஹோட்டல்களில் பயன்படுத்துவதற்காகவும் சந்தையில் கிடைக்கத் தொடங்கியது. 

1983 ஆம் ஆண்டில் Flora வர்த்தக நாமம் அறிமுகம் செய்யப்பட்டது. உயர் தரம் வாய்ந்த பேப்பர் சேவியட்கள், ஃபேஷியல் டிஷுக்கள், பேப்பர் டவல்கள் மற்றும் கழிவறை டிஷுக்கள் போன்றவற்றை இலங்கை சந்தையில் சகாயமாக கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்த வர்த்தக நாமம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இரத்மலானை பகுதியில் வாடகைக்கு பெறப்பட்ட பகுதியில் தொழிற்சாலை நிறுவப்பட்டு ஆரம்பகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஒரு இயந்திரம் மற்றும் ஏழு ஊழியர்களுடன் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டு முதல், ஹோமகம, கட்டுவான தொழிற்பேட்டை பகுதியில் அமைந்த தனது சொந்த கட்டிடத்துக்கு உற்பத்தி தொழிற்சாலை மாற்றப்பட்டது. இங்கு முழு ஆற்றலுடனான உற்பத்தி வளாகம், களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக வசதி போன்றவற்றுடன் நவீன வசதிகளைக் கொண்ட உட்கட்டமைப்பு மற்றும் சரக்கு கையாளல் வசதிகள் போன்றன காணப்படுவதுடன், 320 க்கும் அதிகமான ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் தொழிற்சாலையை அண்மித்த பகுதிகளில் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 40 வருடங்களாக மென்மையான, பயன்படுத்திவிட்டு அழித்துவிடக்கூடிய டிஷு கடதாசி தொழிற்துறையில் சந்தை முன்னோடியாக Flora டிஷுக்கள் திகழ்வதுடன், இலங்கையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான சந்தைப்பங்கை தன்வசம் கொண்டுள்ளது. நாடு முழுவதையும் உள்வாங்கி பரந்த விநியோக வலையமைப்பைக் கொண்டுள்ளது. Flora டிஷு வர்த்தக நாமம் தன்வசம் பரந்தளவு தெரிவுகளை கொண்டுள்ளதுடன், நுகர்வோருக்கு மாத்திரமன்றி, ஹோட்டல்கள், உணவகங்கள், வைத்தியசாலைகள் போன்ற நிறுவகங்களுக்கும் வழங்குகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .