2024 மே 04, சனிக்கிழமை

Gem Sri Lanka மூலம்‘A Celebration of Gemstones’ கண்காட்சி ஏற்பாடு

Freelancer   / 2023 செப்டெம்பர் 22 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனன்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக சங்கமானது (CGJTA) இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இயற்கையாக கிடைக்கின்ற பலதரப்பட்ட விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக உலகிற்கு காண்பிக்கும் வகையில், ‘Gem Sri Lanka’ என்ற தலைப்பில் உலகத்தரம் வாய்ந்த வர்த்தகக் கண்காட்சியொன்றை முதன்முறையாக ஏற்பாடு செய்கின்றமை தொடர்பில் அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள ஷங்கிரி-லா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வில், இலங்கையில் கிடைக்கின்ற பல்வேறு வகையான அரிதான, விலைமதிப்பற்ற இரத்தினக்கற்கள் மற்றும் அதன் மூலமாக எமது நாடு கொண்டுள்ள வர்த்தக வாய்ப்புக்கள் தொடர்பான அறிவை வெளி உலகிற்கு பரப்பும் நோக்குடனேயே இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

CGJTA ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் உள்ளூர் ஊடகங்கள் மற்றும் பிரமுகர்கள் மற்றும் இலங்கை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை (National Gem and Jewellery Authority of Sri Lanka - NGJA), இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (Export Development Board of Sri Lanka - EDB) ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் ‘Gem Sri Lanka’ வர்த்தக கண்காட்சியின் நிர்வாக சபையின் அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். இக்கண்காட்சி நிகழ்வானது 2024 ஜனவரி 11 முதல் 13 வரை சினமன் பெந்தோட்டை பீச் ரிசோர்ட்டில் (Cinnamon Bentota Beach Resort) நடைபெறும்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த Gem Sri Lanka இன் தலைவர் ஹில்மி காசிம், “எமது தனிச்சிறப்புக்களை வெளிக்கொண்டு வந்து, சர்வதேச சந்தைக்கு அவற்றைக் காண்பித்து, சர்வதேச மட்டத்தில் வர்த்தக வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு சிறந்த மேடையாக Gem Sri Lanka வர்த்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்வது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் முழுமையான ஆதரவையும், அங்கீகாரத்தையும் பெற்றுள்ள Gem Sri Lanka கண்காட்சி நிகழ்வானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இரத்தினக்கல் வர்த்தக சமூகத்தினரின் கவனத்தை ஈர்த்து, இரத்தினக்கல் வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் இலங்கையை ஒரு மையப்புள்ளியாக மாற்றி, ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்க்க வழிவகுக்கும் என நாம் நம்புகின்றோம். அத்துடன், Gem Sri Lanka கண்காட்சி நிகழ்வானது இலங்கையிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் அசல் இரத்தினக் கற்களின் அரிய மற்றும் தனித்துவமான பண்பினை உலகுக்குக் காண்பிக்கவும் உதவும்," என்று குறிப்பிட்டார்.

குறிப்பாக இரத்தினக்கல் சம்பந்தமாக உள்நாட்டு வர்த்தக வாய்ப்புக்கள் மற்றும் அதன் சிறந்த பலன் குறித்து அறிவை மேம்படுத்துவதற்கு இக்கண்காட்சி உதவும். அத்துடன் வெளிநாட்டு கொள்வனவுகள் மற்றும் உள்நாட்டில் முக்கியமான கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளின் அதிகரிப்பானது நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இரத்தினக்கற்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்களை Gem Sri Lanka கண்காட்சி நிகழ்வு தோற்றுவிக்கும்.

இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இயற்கையாகக் கிடைக்கும் விலைமதிப்பற்ற, அரிதான இரத்தினக் கற்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே வேளையில் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் Gem Sri Lanka கண்காட்சி உதவும். சர்வதேச மற்றும் உள்ளூர் கொள்வனவாளர்களுக்கு ஒரே கூரையின் கீழ் அனைத்து வகையான இரத்தினக்கற்களையும் பார்த்து மற்றும் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புகளுக்கு Gem Sri Lanka இடமளிக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .