Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 06 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
HNB காப்புறுதிக் கம்பனியின் PLC முழு உரித்துக்கொண்ட அதன் உபநிறுவனமான (HNBA) வரையறுக்கப்பட்ட HNB ஜெனரல் காப்புறுதிக் கம்பனியின் (HNBGI) தக்காபுல் பிரிவான HNB ஜெனரல் தகாபுலினால் பல நன்மைகளைக் கொண்ட வாகன காப்புறுதி முறையொன்று அஸ் - சலாம் மோட்டார் எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
HNBA மற்றும் HNBGI இன் முகாமைத்துவ பணிப்பாளர் தீப்தி லொக்குஆரச்சி தமது கருத்துக்களைத் தெரிவிக்கையில், “‘தகாபுல்’ என்பது பரந்ததொரு உலகுக்கான அணுகுமுறையாகுமென்பதுடன், எமது தொழில் துறையின் விருத்தியில் கருத்தில் கொள்ளக்கூடிய பங்களிப்பை நல்கியுள்ளது. நிதிச் சேவைப் பிரிவின் முக்கிய ஒரு அங்கமான இஸ்லாமிய நிதியிடலின் முக்கிய பங்கினை தக்காபுல் கொண்டுள்ளதுடன், இதன் மூலம் முனைப்பான ஒத்துழைப்பு எண்பிக்கப்படுகிறது. எமது ஒட்டுமொத்த தக்காபுல் சேவைகளும் மக்களது தேவைகளை அடையாளம் கண்டவாறு, ஷரியா சபையின் ஆலோசனைகளுக்கமைய மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.
அஸ் - சலாம் மோட்டார் என்பது மனதில் மகிழ்ச்சி எனும் உற்பத்திப் பெயரின் பொருளை வெளிப்படுத்தும், வழமைக்கு மாறான பல நன்மைகளை கொண்டுள்ள தக்காபுல் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டுள்ள மிகச்சிறப்பானதொரு காப்புறுதி முறையென HNB ஜெனரல் தகாபுலின் தலைவர், ஹிப்லி ஹுஸைர் காப்புறுதி முறைமை பற்றிய தமது கருத்துக்களை தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
இம் முறையின் மூலம் திடீர் விபத்து ஏற்படுகையில் காப்புறுதியாளருக்கு அல்லது காப்புறுதியாளரின் சாரதிக்கு துரித கடன்தேவையை பூர்த்தி செய்தல், காணாமற்போன சாவிகளுக்கான காப்பீடு, வைத்தியசாலை நிதிக் கட்டண கொடுப்பனவு, நோ கிளேம் போனஸ், போனஸ் சீராக்கல் மற்றும் ‘ மைஹோம் ‘தகாபுலுக்கான கழிவைப் பெற்றுக்கொள்ள முடியும். இக்காப்புறுதி முறையை எமது எந்தவொரு HNBGI கிளையிலும் அல்லது எமது முகவர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago