Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 டிசெம்பர் 25 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதித் துறை சேவையில் 18 ஆண்டுகளாக புகழ்பெற்ற நாமம் மற்றும் பலமான நிதி ஸ்திரத்தன்மையை கொண்ட HNB பினான்ஸ் நிறுவனம் தமது சமூக கூட்டாண்மை பொறுப்பின் கீழ் சிலாபம் மற்றும் கந்தளாய் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவ மாணவிகளுக்காக ஓவிய செயமலர்வுகளை அண்மையில் நடத்தியது. இந்த ஓவிய செயலமர்வில் ஓவியம் வரைவதற்கு மேலதிகமாக சிறுவர்களின் படைப்பாற்றல் செயற்றிறனை வளர்த்தல் மற்றும் எண்ணங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
HNB பினான்ஸ் யாலு சேமிப்பு கணக்கின் அனுசரணையுடன் சிலாபம் மற்றும் கந்தளாய் HNB பினான்ஸ் கிளைகளின் ஒத்துழைப்புடன் சிலாபத்தில் அமைந்துள்ள ஆயர் எட்மன் பீரிஸ் வித்தியாலயத்திலும் கந்தளாய் வான் எல வித்தியாலயம் மற்றும் பன்செல்கொடெல்ல கனிஷ்ட வித்தியாலயத்தையும் கேந்திரப்படுத்தியும் செயலமர்வுகள் இடம்பெற்றன. இந்த ஓவியச் செயமலர்வுக்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்துகொண்டனர். பிள்ளைகளின் படைப்பாற்றல் செயற்றிறனை இனங்கண்டு அந்த திறமையை மேம்படுத்த பெற்றோர்கள் எத்தகைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்பது, தொடர்பாக பெற்றோர்கள் இதன்போது அறிவுறுத்தப்பட்டார்கள். இதுதவிர சேமிப்பின் முக்கியத்தும், பணத்தை செலவிடும் முறை தொடர்பாக பெற்றோர்களும் மாணவர்களும் அறிவுறுத்தப்பட்டார்கள். HNB பினான்ஸ் இந்த ஒருநாள் கல்வி செயலமர்வு பெற்றோர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது பாராட்டை பெற்றது.
இந்த ஓவிய செயலமர்வு பிரபல ஓவிய ஆலோசகர் தயாவன்ச குமசாரு அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட 300 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒவியங்களை வரைவதற்கான உபகரணங்களை HNB பினான்ஸ் வழங்கியது. அத்துடன் இந்த செயலமர்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பெறுமதியான சான்றிதழும், பாடசாலை உபரகரணங்களும் பரிசாக வழங்கப்பட்டன.
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago