Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 20 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமுறை தலைமுறையாக நம் முன்னோர் கைக்கொண்டு வந்த தனித்துவமான பாரம்பரியங்களுடன் எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பை HSBC தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
தமிழ்-சிங்கள புத்தாண்டு அர்த்தமுள்ள அநேகமான பாரம்பரியங்களும் சடங்குகளும் நிறைந்ததாகும். எனவே, வாடிக்கையாளர்கள் இப்புத்தாண்டு சுபநேரத்தில் தமது சமய மற்றும் கலாசார அனுஷ்டானங்களைச் சிக்கனமான முறையில் நிறைவேற்றவும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பல்வேறு பாரம்பரியங்களைக் கைக்கொள்ளவும் உதவும் வகையில் HSBC தனது புத்தாண்டு ஊக்குவிப்புத் திட்டத்தை வடிவமைத்துள்ளது.
வருடப் பிறப்பிக்கு என குறித்துரைக்கப்பட்ட நிறங்களில் புத்தாடை அணிவது புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் ஒரு முக்கிய பாரம்பரியமாகும். HSBC வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான நிறங்களில் விதவிதமான ஆடைகளை பல்வேறு ஆடை விற்பனை நிலையங்களில் விசேட தள்ளுபடி விலைகளில் கொள்வனவு செய்ய வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
அன்பளிப்புக்களைப் பகிர்ந்துகொள்வது மற்றுமொரு புத்தாண்டுப் பாரம்பரியமாகும். வங்கி 190க்கு மேற்பட்ட பிரபல வணிக நிறுவனங்களுடன் செய்திருக்கும் ஏற்பாட்டின் கீழ் HSBC வாடிக்கையாளர்கள் 50% வரையான விலைக்கழிவுகளுடன் நவநாகரிக சாதனங்கள், ஆபரணங்கள், கைக்கடிகாரங்கள், வீட்டுப் பாவனைச் சாதனங்கள் மற்றும் அன்பளிப்புப் பொருள்களைக் கொள்வனவு செய்ய முடியும். அத்துடன் சலூன்கள், ஸ்பா பராமரிப்பு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், உணவகங்கள், சுப்பர் மார்க்கட்கள், காப்புறுதி நிறுவனங்கள் முதலியவற்றிலும் நீங்கள் சிறந்த தள்ளுபடிகளைப் பெறலாம்.
HSBC ஸ்ரீலங்காவின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல் தலைவர் தரங்க குணசேகர இது பற்றி தெரிவிக்கையில் “HSBC 125 ஆண்டுகளாக இலங்கையில் செயற்பட்டு வருவதால் இங்குள்ள மக்களின் கலாசாரத்தையும் புத்தாண்டுப் பாரம்பரியங்களையும் நன்கறிவோம். வேகமாக இயங்கும் தற்கால உலகில் பழைய பாரம்பரியங்கள் மெதுவாக அருகி வருகின்றன. இதனை உணர்ந்தே மக்களை மீண்டும் அந்தப் பாரம்பரியங்களுக்கு நெருக்கமாகக் கொண்டுசெல்வது அவசியமென நாம் கருதினோம்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago