Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 மார்ச் 27 , மு.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தாண்டு காலத்தில் HSBC கிறெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்குப் பொன்னான வெகுமதிகள் காத்திருக்கின்றன. 2018 ஏப்ரல் 30ஆம் திகதி வரை வங்கியினால் அமுல் செய்யப்படும்; “Ran Run” என்ற உற்சவகால ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட தொகை வாடிக்கையாளர்கள் 22 கரட் தங்க நாணயங்களைப் பெறுவார்கள்.
தங்க நாணயங்களைத் தவிர, HSBC கிறெடிட் கார்ட் வைத்திருப்பவர்கள் எமது வணிகப் பங்காளி நிறுவனங்களிடமிருந்து மூன்று மில்லியனுக்கு மேல் பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர்களை வெல்ல முடியும். நாடெங்குமுள்ள பல்வேறு விற்பனை நிலையங்களில் 50% வரையான விலைக்கழிவுகளுடன் பொருள்களைக் கொள்வனவு செய்யும் வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைக்கும்.
தள்ளுபடிச் சலுகைகளைப் பெறுவதற்காக முன்கூட்டியே குறித்துரைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு மட்டுமே கார்ட் வைத்திருப்பவர்கள் செல்ல வேண்டும் என்ற வரையறையை நீக்கி, “Ran” புள்ளிகள் ஊடாக வெகுமதியைப் பெறக்கூடிய வகையில், புதிய ஊக்குவிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தமக்கு விருப்பமான எந்தவோர் இடத்திலும் தமது கிறெடிட் கார்ட்டை ஸ்வைப் செய்து, சகல கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலும் “Ran” புள்ளிகளைச் சம்பாதிக்கலாம். குறைந்தபட்சம் ரூ.3,000 பெறுமதியான கொடுக்கல் வாங்கலுக்கே புள்ளிகள் வழங்கப்படும். ஊக்குவிப்புக் காலப்பகுதியில் ஆகக் கூடுதலான புள்ளிகளைச் சம்பாதிக்கும் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுப்படுத்திய பதிப்பு தங்க நாணயங்கள் வழங்கப்படும்.
HSBC ஸ்ரீ லங்காவின் சிற்றளவு வங்கிச் சேவைகள், செல்வ முகாமைத் தலைவர் தெரிவிக்கையில், “புத்தாண்டு என்பது பாரம்பரியங்களை உள்ளடக்கிய கொண்டாட்டக் காலமாகும். அதேசமயத்தில் பல விடயங்களைக் கவனிப்பதற்குச் சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய காலமும் ஆகும். எனவே, விரும்பிய இடத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்யும் வசதி எமது நேரத்தை மீதப்படுத்திக் கொண்டாட்டங்களில் கூடுதலாக ஈடுபட உதவும். நீங்கள் எந்த இடத்தில் பொருள்களைக் கொள்வனவு செய்தாலும் “Ran” புள்ளிகளைச் சம்பாதித்து தங்க நாணயங்களை வெல்வதற்குத் தகுதி பெறுவதுடன் சலுகைகளையும் அனுபவிக்க முடியும்” என்று கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .