2025 மே 20, செவ்வாய்க்கிழமை

HUAWEI Y5 Lite அறிமுகம்

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei Y5 Lite என்ற HUAWEI இன் Android Go gadget சாதனத்தை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளதாக HUAWEI Sri Lanka நிறுவனம் அறிவித்துள்ளது.   

5.45 அங்குல HD+ முகத்திரை மற்றும் 1440 x 720 Huawei Y5 Lite கொண்டுள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும் இலகுவாக கையில் எடுத்துச் செல்லும் அளவுக்குச் சிறிய அளவு கொண்டதுடன், பாவனையாளர்கள் இதைச் சௌகரியமாக கைகளில் வைத்திருக்கவும் முடியும்.

இளமை உணர்வுக்குப் பொருத்தமான வீடியோ பரிவர்த்தனை, விளையாட்டு, பொழுதுபோக்கு மய்யமாக சிறந்ததொரு தளமேடையை இது வழங்குவதால், தலைசிறந்த முகத்திரையானது உலகெங்கிலும் இளைஞர், யுவதிகள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.   

மேற்குறி ப்பிட்ட சிறப்பம்சங்கள் அனைத்துக்கும் மத்தியில், Huawei Y5 Lite ஆனது MediaTek MT6737M processor இன் உந்துசக்தியைக் கொண்டு உள்ளதுடன், 16 GB மெமரி ஆற்றலையும் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஒன்றைத் தெரிவு செய்யும் போது, மக்கள் தமது தகவல் விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் எனப் பலவற்றைத் தமது கரங்களிலேயே வைத்திருக்கக்கூடிய மெமரி தேக்குதிறன் கொண்ட ஸ்மார்ட்போனையே விரும்பிக் கேட்டு வாங்குகின்றனர்.

இத்தேவையைத் தீர்த்து வைக்கும் பொருட்டு, கட்டுபடியாகும் விலையில், தாராளமான தேக்குதிறனுடன் சௌகரியத்தையும் இலகுவான உபயோகத்தையும் Y5 Lite வழங்குகின்றது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X