Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 பெப்ரவரி 07 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணையத்தில் பதிவை மேற்கொண்டு வாடிக்கையாளர்கள் இலவசமாக HUTCH சிம் அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியும். HUTCH மற்றுமொரு சேவையை முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அதன் மூலமாக தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தை வழங்கும் இத்தகைய ஒரு சேவையை முதன்முதலாக வழங்க முன்வந்துள்ளது.
HUTCH அறிமுகப்படுத்தியுள்ள “இணையத்தின் மூலமான சிம் அட்டை விண்ணப்பம் மற்றும் விநியோக” சேவையின் கீழ் வாடிக்கையாளர்கள் தமது HUTCH சிம் அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கு இணையத்தின் மூலமான, மிக இலகுவான பதிவு நடைமுறையின் கீழ் விண்ணப்பித்து, அவற்றை எவ்வித கட்டணங்களுமின்றி தமது வீடுகளுக்கே நேரடியாக தருவித்துக்கொள்ள முடியும்.
தற்போதைய காலகட்டத்தில், நுகர்வோரின் வேலைப்பளுவைக் கருத்தில் கொண்டும், அவர்கள் தமது அன்றாடத் தேவைகள் பலவற்றை தமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிகணினிகளை (லெப்டொப்) மூலமாக இணையத்தினூடாக நிறைவேற்றிக்கொள்வது அதிகரித்துள்ளமையாலும், புதிய சிம் அட்டையொன்றை பெற்றுக்கொள்வதற்கு சிம் அட்டை விற்பனை மையம் ஒன்றுக்கு தாங்களே நேரடியாக செல்ல வேண்டிய தேவையை விடுத்து, இணைய வசதியை உபயோகித்து, மிகவும் சௌகரியமான வழியில், வாடிக்கையாளர்கள் தமக்குத் தேவையான சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ளும் இவ்வசதியை HUTCH நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் அறிமுக சலுகையாக, ஏராளமான விசேட வெகுமதித் திட்டங்களை HUTCH சிம் அட்டைகள் மூலமாகப் பெற்றுக்கொள்ள முடியும். விநியோகம் இடம்பெறும் சமயத்தில் HUTCH சிம் அட்டை உடனடியாகவே தொழிற்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் அதனைப் பெற்றுக்கொண்ட உடனேயே பயன்படுத்த முடியும்.
6 hours ago
9 hours ago
20 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
20 Sep 2025