Editorial / 2020 ஜூன் 05 , பி.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிய நிலைபேறாண்மை அறிக்கையிடல் விருதுகள் (ASRA) 2019இல், ஹேலிஸ் தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பி.எல்.சி (TTEL) நிறுவனம் இரண்டு வெள்ளி விருதுகளை வென்றுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள கொவிட்-19 தொற்றுக் காரணமாக, சிங்கப்பூரிலிருந்து இணையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு 200க்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தகத் தலைவர்கள், நிலைபேறாண்மையின் கூட்டாளர்கள், கல்வியாளர்கள், வர்த்தக சங்கங்கள், வழக்கறிஞர் அமைப்புகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வுக்கு கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட, சிங்கப்பூருக்கான சுவிடிஷ் தூதுவர் நிக்கலாஸ் குவார்ன்ஸ்ட்ரோம் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த இணையத்தளம் ஊடான நிகழ்வில், TTELக்கு ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை, ஆசியாவின் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை வடிவமைப்புக்கான வெள்ளி விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளுக்கான சிபாரிசு, தீர்மானங்கள் சுயாதீனக் குழுவால் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் உள்ளீடுகள், பல கட்ட மதிப்பீட்டுச் செயன்முறையின் மூலம் இயக்கப்பட்டு, அதன் பின்னர் போட்டியாளர்களின் நற்பெயரைக் கருத்தில் கொண்டு, இறுதித் தீர்ப்பு செயன்முறையின் கீழ், வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டனர்.
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago