Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 நவம்பர் 09 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
Huawei தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுடன் இணைந்து, பிரதம மந்திரியின் அலுவலகத்தில் Seeds For the Future என்ற செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது. இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறை சார்ந்த திறமைகளை வளர்த்து, இலங்கையை டிஜிட்டல் ரீதியாக வலுவூட்டப்பட்ட ஒரு தேசமாக மாற்றியமைப்பதற்குத் தேவையான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவுக்கு அனுசரணை வழங்கும் வகையில் Seeds For the Future என்ற தனது சர்வதேச அளவிலான வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தை Huawei இலங்கையில் ஆரம்பித்துள்ளது. இதன் ஆரம்பமாக, இலங்கையிலுள்ள 10 பல்கலைக்கழக மாணவர்கள், 2016 நவம்பர் 5 முதல் நவம்பர் 19 வரை சீனாவுக்கு கல்விச் சுற்றுலா ஒன்றை மேற்கொள்வதற்கு Huawei அவர்களுக்கு அனுசரணையளித்துள்ளது.
நாடெங்கிலுமுள்ள 8 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 10 மாணவர்கள், இச்செயற்றிட்டங்களுக்கானத் தெரிவு நடைமுறையின் கீழ் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் Huawei ஆகியவற்றினால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இச்சுற்றுலாவின் போது, சீன பாரம்பரிய கலாசாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை இம்மாணவர்கள் பெற்றுக்கொள்வதுடன், பீஜிங் மாநகரில் உள்ள பீஜிங் மொழி மற்றும் கலாசாரம் பல்கலைக்கழகத்தில் ஒரு வாரமாக சீன எழுத்து மற்றும் ஓவியம் வரைதல் போன்ற பாடநெறிகளில் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
மேலும் சீனாவின் ஷென்ஷேன் மாநிலத்தில் அமைந்துள்ள Huawei நிறுவனத்தின் தலைமையலுவலகத்திலுள்ள அதிநவீன ஆய்வுகூடங்களில் நேரடி அனுபவத்துடன், LTE மற்றும் cloud computing போன்ற நவீன தொழில்நுட்பங்களைக் கற்றறியும் வாய்ப்பையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர். Huawei நிறுவனத்தின் பணியாளர்களுடன் நேரடியாக இடைத்தொடர்புபட்டும், Huawei ஆய்வுகூடங்களுக்கு விஜயம் செய்தும் நேரடி கற்றல் அனுபவங்களை மாணவர்கள் பெற்றுக்கொள்வதுடன், தகவல் தொடர்பாடல், தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன தொழில்நுட்பத்தின் நேரடி செயல்முறை விளக்கங்களையும் அவர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளமை இச்செயற்றிட்டத்தின் தனித்துவங்களில் ஒன்றாகும்.
32 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
34 minute ago
1 hours ago
2 hours ago