2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

Huawei உடன் சொஃப்ட்லொஜிக் அணி கைகோர்ப்பு

S.Sekar   / 2021 ஏப்ரல் 14 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

Huawei மற்றும் சொஃப்ட்லொஜிக்; இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிக் பிரைவேட் லிமிடெட் ஆகியன நாட்டின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் புதுமை படைக்கும் வகையிலான நிறுவன தீர்வுகளை அறிமுகம் செய்வதற்காக ஒன்றிணைவதாக அறிவித்துள்ளன.

டிஜிட்டல் பொருளாதார முறைமை இப்போது நாடுகளின் வளர்ச்சியிலும் அதன் தொழில்களின் வளர்ச்சியிலும் இயங்கு சக்தியாக நிறுவப்பட்டுள்ளது மற்றும் நவீன பொருளாதாரத்திற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் மறுக்க முடியாததாக மாறியுள்ளது. இந்நாட்டில் ஏறக்குறைய 3 தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக உருவான சொஃப்ட்லொஜிக்;;, இன்று உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்கான ஒரு முன்னணி சந்தை நிலையை கொண்டுள்ளது. வளர்ச்சி அடைவதற்கான வணிக உத்திகளை வடிவமைக்கவும், தொழில்நுட்பத்தை நிர்வகிப்பதற்கான புதுமையான வழிகளைக் கண்டறியவும் இலங்கைக்கும் உள்ளூர் அமைப்புகளுக்கும் உதவி வழங்கத்தக்க ஒரு தனித்துவமான நிலையில் இந்நிறுவனம் இன்று உள்ளது.

இந்த நிகழ்வில் Huawei நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை நிர்வாக அதிகாரி லியாங் யி கருத்துத் தெரிவிக்கையில் 'சொஃப்ட்லொஜிக் உடனான கூட்டமைப்பு இலங்கை சந்தைக்கு புதுமையான தீர்வுகளை வழங்க எங்களுக்கு உதவும், முக்கியமாக ஹூவாவி; நிறுவனத்தின்  தொழில்நுட்பங்களான கிளவுட், இணைப்பு, AI மற்றும் ஸ்மார்ட் சிட்டி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தொலைத்தொடர்பு மற்றும் நிறுவன வலையமைப்புச் சாதனங்கள் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவற்றில் அதிசிறந்த தீர்வுகளைப் பெற்றுத்தரக்கூடிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப முறைமையை நாங்கள் நிறுவியுள்ளோம்' எனக் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும் உள்ள பலவகையான தொழில்கள் மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கான புதுமையான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை Huawei; என்டர்பிரைஸ் வழங்குகிறது. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வளர்ச்சியில் அதன் பலத்திற்கு ஏற்ற உலகளாவிய தீர்வுகள் வழங்குநராக ஹூவாவி இருப்பதனாலும் Huawei நவீன தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்துகிறது, மேலும் வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் நெருக்கமாக இணைந்து முழு திறனுடனும் ஆராய்ந்து செயற்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .