Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 25 , மு.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷென்ஷன் நகரில் அமைந்துள்ள Huawei தலைமை அலுவலகத்திற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்திருந்த சமயத்தில் இலங்கைக்கான சீன தூதுவருடன் இணைந்து, இலங்கை தொலைதொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் Huawei Sri Lanka நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாகப் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.
இலங்கை அரசாங்கம் ர்ரயறநi உடன் கொண்டுள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அது கொண்டுள்ள அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Huawei இன் புதிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் தொழிற்துறை கண்காட்சி மண்டபதுக்கு நேரில் விஜயம் செய்த கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள், Huawei நிறுவனத்தின் சிரேஷட பிரதித் தலைமை அதிகாரியான லீ ஜிங்குடன்சிநேகபூர்வமான சந்திப்பொன்றிலும் கலந்து கொண்டார்.
இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் தூதுவரான யீ ஸியான்லியாங் அவர்கள் குறிப்பாக ஹம்பாந்தோட்டையிலுள்ள சர்வதேச நிதி நகரத்தின் மூலமாக Huawei நிறுவனததுக்கு இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு தனது மகத்தான ஆதரவை வழங்குவதாக இந்சந்திப்பின் போது குறிப்பிட்டிருந்தார்.
மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரான கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க அவர்கள் தொழில்நுட்ப நகரமாக கொழும்பை மாற்றுவதற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப திட்டமிடல் மற்றும் உட்கட்டமைப்பு நிர்மாணப் பணிகளில் பங்கேற்க முன்வருமாறுHuawei இக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இச்சந்திப்பையடுத்து, இலங்கைத் தொலைதொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மற்றும் Huawei நிறுவனம் ஆகியவற்றுக்கிடையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பாகப் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடும் நிகழ்வில் பிரதம ரணில் விக்கிரமசிங்க, யீ ஸியான் லியாங் மற்றும் லீ ஜிங் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
4 hours ago