Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 நவம்பர் 17 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறு மாதங்கள் முதல் 3 வருடங்கள் வரையான வயதுடைய தமது பிள்ளைகளின் புகைப்படங்களை Huggies பேஸ்புக் பக்கத்தினூடாகச் சமர்ப்பிக்குமாறு பெற்றோருக்கு அழைப்புவிடும் வகையில் நாடளாவிய பிரசார நடவடிக்கையை Huggies ஆரம்பித்திருந்தது. இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் முதற்கட்டம், ஒக்டோபர் 1ஆம் திகதி, சிறுவர்கள் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி அல்லது பத்திரிகை விளம்பரங்கள் எதுவுமின்றி, Huggies போன்ற குழந்தைகளை
இலக்காகக் கொண்டு, வர்த்தக நாமம் ஒன்று சமூக ஊடகத்தின் மூலமாக இதனை அமுல்படுத்துவது ஆசிய பிராந்தியத்தில் இது வரை இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்படங்களை அனுப்பி வைப்பதற்கு ஒக்டோபர் 19 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன், பெற்றோர்கள் மிகவும் ஆர்வத்துடன் முன்வந்து 1,500 க்கும் மேற்பட்ட புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளமை இப்பிரசாரத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது.
குழந்தைகளுக்கான அணையாடை (diaper) சந்தையில் தனது சிறந்த தரத்துக்காக, சர்வதேச ரீதியாகப் பிரபலமான ஒரு வர்த்தக நாமமாக Huggies திகழ்ந்து வருகின்றது. அண்மையில் Huggies வர்த்தகநாமம் இலங்கையிலும் அறிமுகமாகியுள்ளதுடன், இலங்கையில் சிறுவர்களை இலக்காகக் கொண்டு மேற்குறிப்பிட்ட இலட்சியப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
பம்பரம் போல் சுழலும் இன்றைய உலகில் எம்மைச் சூழத் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற மாற்றங்களும், அவை தொடர்பான விளைவுகளும் சாதாரணமான ஒரு விடயமாக மாறியுள்ளன. இவை வளர்ந்தவர்களுக்கு மட்டும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதில்லை, மாறாகக் குடும்பங்கள் மற்றும் அவர்களது கைக்குழந்தைகள் மற்றும் இளம் பிள்ளைகளையும் பாதிக்கின்றன. வேலைப்பளுமிக்க வாழ்க்கைமுறையானது ஒன்றாகக் கூடியிருந்து ஓய்வெடுக்கும் குடும்பக் கட்டமைப்பை மாற்றியமைத்து, தமது குடும்பத்தைக் கவனிப்பதில் பெற்றோர்கள் இன்று அதன் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
குடும்பத்தின் அரவணைப்பு மற்றும் அக்கறை ஆகிய பாதுகாப்பான பிணைப்பிலிருந்து இன்று தமது இளம் பிள்ளைகள் விலகிச் செல்லும் துர்ப்பாக்கிய நிலைமையை அனுபவிக்கும் நிலைக்குப் பெற்றோர்கள் மெதுவாக தள்ளப்பட்டு வருகின்றனர்.
பெற்றோர் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு இடையிலான பிணைப்பைப் பேணுதல் மற்றும் இன்றைய உலகின் யதார்த்தங்களை இனங்காணுதல் ஆகியவற்றைத் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ள Huggies, இன்றைய சமூக முறைமையின் யதார்த்தங்களை எவ்வாறு குடும்பங்கள் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதைப் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணவூட்டும் பணியை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளது. நேசத்தை வளர்க்கும் அதேசமயம், பெற்றோர்களும் அவர்களது பிள்ளைகளும் தமக்கிடையில் விடுபட்டுப்போயுள்ள பிணைப்பை இனங்கண்டு, அவர்கள் குடும்பப்பிணைப்பை மீளவும் கட்டியெழுப்ப வாய்ப்பளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை Huggies வடிவமைத்துள்ளது.
33 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
35 minute ago
1 hours ago
2 hours ago