Freelancer / 2025 ஜூலை 25 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Techno 2025 நிகழ்வில், இலங்கை பொறியியலாளர் நிறுவகத்துடன் (IESL) மீண்டும் கைகோர்த்திருந்தது. ‘Engineering for a Smart Nation,’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் இலங்கையின் எதிர்காலத்தை தயார்ப்படுத்தும் புத்தாக்கமான பொறியியல் மற்றும் தொழினுட்ப புத்தாக்கங்களை வெளிப்படுத்தும் வகையில், முன்னணி கண்காட்சியாக அமைந்திருந்தது.
உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வில், SLT-MOBITEL Group பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான IESL இடம் அனுசரணை காசோலையை கையளித்திருந்தார். அந்நிகழ்வில் SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்கவும் இணைந்தார்.
2025 ஒக்டோபர் 10 – 12 வரையில் BMICH இல் இந்தக் கண்காட்சி முன்னெடுக்கப்படும். இதில், SLT-MOBITEL இனால் தொழினுட்ப தீர்வுகள் மற்றும் டிஜிட்டல் மேம்படுத்தல்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டு விருந்தினர்களுக்கு தொழினுட்பம் மற்றும் இணைப்புத்திறனின் எதிர்காலம் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படும்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026