2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

IFS இலங்கையில் 21 வருட பூர்த்தி

Editorial   / 2018 நவம்பர் 15 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச ரீதியில் வியாபார அப்ளிகேஷன்களை (Software) வடிவமைக்கும் நிறுவனமான IFS, இலங்கையில் தனது 21 வருட பூர்த்தியை கொண்டாடுகிறது. 1997ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த இந்நிறுவனம், தற்போது 1,100க்கும் அதிகமான ஊழியர்களை தன்வசம் கொண்டுள்ளதுடன், இவர்கள் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர்.  

கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நிறுவனம் தனது முக்கியமான மைல்கல் சாதனைகள், ஒப்பற்ற புத்தாக்கம், தயாரிப்பு அபிவிருத்தி, உதவி, சிறந்த நிறுவனசார் கலாசாரம் போன்றவற்றை வெளிப்படுத்தியிருந்தது.   

இலங்கையின் 120க்கும் அதிகமான சிறந்த நிறுவனங்களை தனது வாடிக்கையாளராக IFS கொண்டுள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் IFS நிறுவனத்தின் தீர்வுகளை பயன்படுத்தி பொருட்கள் உற்பத்தி மற்றும் விநியோக செயற்பாடுகள், சொத்துக்களை பேணல் மற்றும் சேவை நோக்குடைய செயற்பாடுகளை நிர்வகித்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றன. IFSஇன் துறைசார் நிபுணத்துவமான மக்கள் மற்றும் தீர்வுகள் போன்றவற்றுடன், வாடிக்கையாளர்களுக்கான அர்ப்பணிப்பு போன்றன அங்கிகரிக்கப்பட்ட முன்னணி நிறுவனமாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், துறைக்கான பரிந்துரைக்கப்பட்ட விநியோகத்தராகவும் திகழச் செய்துள்ளது.  

IFS இன் ஆசியா பசுபிக் மற்றும் ஜப்பான், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா பிராந்தியங்களுக்கான பிரதம அதிகாரி ஸ்டீபன் கீஸ் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை சேர்க்கும் வகையில் பயன்படுத்த இலகுவான, துரிதமான பிரயோகிக்கக்கூடிய, வியாபார தர மென்பொருள் வழங்கலினூடாக தனது நீண்ட கால அர்ப்பணிப்பை பேணி வருகிறது. இலங்கையில் எமது 21 வருட கால பிரசன்னம் என்பது, வெற்றிகரமாக இயங்கும் வியாபார மாதிரிக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எமது பிராந்திய மற்றும் சர்வதேச வியாபார செயற்பாடுகளுக்கு உதவுவதற்கு அவசியமான ஆளுமைகள் மற்றும் அறிவை கொண்ட முக்கிய பகுதியாக இலங்கையை நாம் கருதுகிறோம். இலங்கையில் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், இதனூடாக நாம் இயங்கும் சமூகத்துக்கு எம்மால் மீள வழங்கக்கூடியதாக உள்ளது. எமது ஊழியர்கள், நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்திடையே பரஸ்பர அனுகூலமளிக்கும் பங்காண்மையை இது ஏற்படுத்த உதவியுள்ளது” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X