Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 30 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
IIHS (International Institute of Health Sciences) கல்வியகம் தற்போது எமது நாட்டு ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் சர்வதேச மட்டத்திலான தொழில் தகைமையினைப் பெறுவதற்கான கல்வியியல் இளநிலைப் பட்டப்படிப்பு (Bachelor of Education) மற்றும் வர்த்தக நிர்வாக முதுநிலைப் பட்டப்படிப்பு (MBA) பாடநெறிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
மலேசிய திறந்த பல்கலைக்கழகத்தினால் (Open University-Malasia) வழங்கப்படுகின்ற இக்கல்வியியல் இளநிலைப் பட்டப்படிப்பு மற்றும் வர்த்தக நிர்வாக முதுநிலைப் பட்டப்படிப்பு பாடநெறிகளின் சர்வதேச பல்கலைக்கழக கற்கை மத்திய நிலையமாக IIHS நிறுவனம் விளங்குகின்றது.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சியினை நிறைவு செய்துள்ள ஆசிரியர்கள் இக் கல்வியியல் இளநிலைப் பட்டப்படி்புக்கு பதிவு செய்ய முடியுமென்பதோடு, பட்டதாரி ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பட்டப்படிப்பினை மேற்கொண்டு சர்வதேச தரத்திலான தொழில் தகைமையினைப் பெற முடியும். உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மூன்றாண்டு கால டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்து அதன் மூலம் இக்கல்வியியல் இளநிலை பட்டப்படிப்பினை மேற்கொள்ள முடிவதோடு, பகுதி நேர அடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்ய முடியும்.
கல்வியியல் இளநிலைப் பட்டப்படிப்புக்கு உலகளாவிய ரீதியில் பெருமளவு வரவேற்பு உள்ளதோடு, இப்பாடநெறியினை மேற்கொள்வோருக்கு உலகில் எந்தவொரு நாட்டிலும் ஆசிரியராக பணியாற்ற முடியுமென்பது இவ்விளநிலைப் பட்டப்படிப்பிலுள்ள சிறப்பம்சமாகும். அதிபர்களுக்காக நடாத்தப்படுகின்ற வர்த்தக நிர்வாக முதுநிலைப் பட்டப்படிப்பினை நிறைவு செய்வதன் மூலம் சர்வதேச மட்டத்திலான தொழில் சார் தகைமையினைப் பெறலாம். ஆசிரியர் தொழிலுக்கு உலகம் முழுவதிலும் பாரிய அளவில் வரவேற்பு உள்ளதால், ஆசிரியர் பணியில் ஈடுபடுவதன் மூலம் அதிக ஊதியத்தைப் பெறும் வாய்ப்பினையும் பெறலாம். ஜனவரி மாதத்திலிருந்து இப்பட்டப்படிப்பு கற்கை நெறிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
35 minute ago
50 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago
50 minute ago