2025 ஜூலை 26, சனிக்கிழமை

INSEE சீமெந்துக்கு கிறீன் பிளாட்டினம் விருது

Gavitha   / 2017 மார்ச் 07 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மேல் (வயம்ப) மாகாண சபையினால் 2017 பெப்ரவரி 12-17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட “ஹரித சிஹினய 2017” கண்காட்சியில், இலங்கையின் நிர்மாணத்துறையில் நிலைபேறான செயற்பாடுகளை உறுதியாக ஊக்குவித்து வரும் INSEE சீமெந்து, நிலைபேறான அர்ப்பணிப்புக்கான கிறீன் பிளாட்டினம் விருதை தனதாக்கிக் கொண்டுள்ளது. இந்த விருதை, இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தார். 

தேசிய வலு சிக்கன விருதுகளை வென்றுள்ள ஒரே மாகாண நிர்வாக அமைப்பான வடமேல் மாகாண சபை, வலுச்சேமிப்பு மற்றும் சூழல் தொடர்பில் கடந்த சில ஆண்டுகளாக பெருமளவு கவனம் செலுத்தி வருகிறது. 2016இல் வட மேல் மாகாண வலு திட்டமிடல் செயற்றிட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், மாகாண சபையினால் காபன் வெளியீட்டை குறைக்கும் நடவடிக்கைகளும் நிர்மாணம், தொழிற்றுறை, உள்ளகத்துறை மற்றும் போக்குவரத்து போன்றன அடங்கலாக எட்டு பிரிவுகளில் முன்னெடுக்கிறது. பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் நிலைபேறான செயற்பாடுகள், சூழல் பாதுகாப்பான செயற்பாடுகள் போன்ற எட்டுத்துறைகளில் இந்தக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இலங்கை கட்டட நிர்மாணத்துறையில் முன்னணி வகிக்கும், INSEE சீமெந்து நிறுவனம் தனது வெவ்வேறு தொகுதிகளினூடாக பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தொழில்நுட்பத்தை அதிகரித்துள்ளது. இதனூடாக இலங்கையில் மிகக்குறைந்த பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்துடன் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து எனும் வகையில் INSEE சீமெந்து தனித்து விளங்குகிறது. சங்ஸ்தா எனும் பெயரில் உற்பத்தியாகும், ஒரு சீமெந்துப்பை உற்பத்தியின் போது வெளியாகும் காபனீரொட்சைன் வாயுவியன் அளவு சராசரியாக 7 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. கிறீன் பில்டிங் கவுன்சில் இனால் வழங்கப்படும் கிறீன் பில்டிங் சான்றிதழை வென்றெடுத்த முதல் சீமெந்து உற்பத்தி INSEE சீமெந்து ஆகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X