2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

INSEE சீமெந்துக்கு இரு விருதுகள்

Editorial   / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி சூழல் விருதுகள் 2018 இல், INSEE சீமெந்துக்கும், INSEE Ecocycle லங்கா நிறுவனத்துக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனூடாக, இரசாயன தொழி‌ற்றுறை மற்றும் கழிவு முகாமைத்துவ துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனம் எனும் வகையில் சூழல் மேம்பாட்டுக்காக நிறுவனம் மேற்கொள்ளும் செயற்பாடுகள் கௌரவிக்கப்பட்டுள்ளன.  

மத்திய சூழல் அதிகார சபையினால் (CEA) இனால் தொழிற்றுறை கழிவு முகாமைத்துவ தீர்வுகளை வழங்கும் INSEE Ecocycleக்கு வெள்ளி விருது வழங்கப்பட்டிருந்தது. புத்தளம் நகரில் அமைந்துள்ள INSEE சீமெந்து நிறுவனத்தின் சூழலுக்கு நட்பான உற்பத்தி செயன்முறைகளை கௌரவிக்கும் வகையில் வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது. மத்திய சூழல் அதிகார சபையின் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு, சூழல் பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் சேவைத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.  

INSEE சீமெந்து ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி நந்தன ஏக்கநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டின் பெரும்பான்மையோரால் விரும்பப்படும் INSEE சங்ஸ்தா சீமெந்து உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிறுவனம் எனும் வகையில் இந்த விருதுகளை வெற்றியீட்டியுள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்” என்றார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X