Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ், In Vitro Fertilization (IVF) குழந்தை பிரசவத்தைப் பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வசதியை 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்ததைத் தொடர்ந்து, இந்த முக்கியத்துவம் வாய்ந்த இலக்கை எய்தியுள்ளதாக லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் மேலும் அறிவித்துள்ளது.
இலங்கையில் காணப்படும் அதிகளவு மதிப்பைப் பெற்ற கருக்கட்டல் நிலையமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.IVF களத்தில் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் IVF நிலையம் என்பது பல புரட்சிகரமான சாதனைகளைப் புரிந்துள்ளது. வருடம் முழுவதும் லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கருக்கட்டல் நிலையம் இயங்குவதுடன், நவீன மருத்துவ வசதிகளைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக, நோயாளரின் இயற்கை மாதவிடாய் சுழற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாமல், வெற்றிகரமான முறையில் கருக்கட்டல் செயற்பாடுகளை முன்னெடுக்கிறது.
கடந்த ஆண்டு, உலகத்தரம் வாய்;ந்த இந் நிலையத்தின் மூலமாக, முதலாவது Blastocyst Culture (Day 5 embryo transfer) முறை மூலமான கருக்கட்டல் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்திருந்தது. இதன் போது கருமுளையானது (embryo) இன்கியுபேட்டரில் 5 தினங்கள் பேணிப்பராமரிக்கப்பட்டதன் பின்னர், கருப்பப்பைக்கு விடுவிக்கப்படும். இதன் மூலம் கருக்கட்டல் வீதத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் வதிவிட மருத்துவ அதிகாரியும்,Clinical Embryologist மான வைத்தியர் மதர ரலபனாவ கருத்துத் தெரிவிக்கையில், 'இயற்கையான முறையில், கருக்கட்டல் நடைபெற்றதன் பின்னர், மூன்று நாட்களுக்குள் கருமுளை 2 அணுக்களிலிருந்து 8 அணுக்களாக வளர்ச்சியடையும். இச்செயற்பாடு பலோப்பியன் குழாய்களில் நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து, கருமுளை Blastocyst ஆக வளர்ச்சியடைந்து, அடுத்த இரு தினங்களில் கருப்பைக்குரிய உந்துதல் அளிக்கப்பட்டு உள்வைப்பு இடம்பெறும். எனவே, Blastocyst மாற்றீடு மூலம், கருப்பைக்குரிய உந்துதல் மற்றும் உள்வைப்பு ஆகியன இயற்கையான முறையில் நடைபெறுவதற்கு ஒப்பானதாக இடம்பெறும்' என்றார்.
கருக்கட்டல் நிலையத்தின் பெண்நோயியல் சிகிச்சை நிபுணரான வைத்தியர். நிஷேந்திர கருணாரட்ன கருத்துத்தெரிவிக்கையில், பெருமளவு தகைமை மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் நுட்பவியலாளர்கள் மூலமாக தம்பதியர் இரு தரப்பினரிலும் பரிசோதனைகளை முன்னெடுப்பார்கள்.
முதல் கட்டமாக ஆணில் காணப்படும் விந்தின் அளவு கணக்கெடுக்கப்படும். பெண்களுக்கு வுசயளெ ஏயபiயெட ஸ்கான் அல்லது 3னு ஸ்கான் முன்னெடுக்கப்படும். கருக்கட்டல் ஏற்படாமை தொடர்பான காரணம் கண்டறியப்பட்டதன் பின்னர் சிகிச்சைகள் ஆரம்பமாகும். ஹோர்மோன் சிகிச்சை மற்றும் கருமுட்டை உள்வைப்பு செயன்முறை மூலமாக பெண் கருக்கட்டத்தவறும் பட்சத்தில், ஐவெசய ருவநசiநெ ஐளெநஅiயெவழைn (ஐருஐ) அல்லது ஐn ஏவைசழ குநசவடைணையவழைn (ஐஏகுஃஐஊளுஐ) முன்னெடுக்கப்படும்' என்றார்.
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago