Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 மார்ச் 08 , பி.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம், “கட்டடக்கலை கண்காட்சி 2017” (Architect Exhibition 2017) நிகழ்வில் பங்கேற்று, ஏராளமான உற்பத்திகளை இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.
JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி வகைகளின் தொடரானது, மனதைக் கவரும் விதத்திலமைந்த வீடுகள் மற்றும் கைத்தொழில் துறைக்கான அலங்கார எமல்சன்கள், வெளிப்புற சுவர் மற்றும் எனாமல் வர்ணப்பூச்சுக்கள், பராமரிப்புசார் உற்பத்திகள், மக்கு வகைகள் மற்றும் மேற்சாந்துகள், உட்கூரைகள், மரத்தால் தரையிடல் மற்றும் தரை அமைப்பு, அலுவலக இருக்கை மற்றும் மேசை ஒழுங்கமைப்பு, கார்பட் விரிப்புபோடுதல், உராய்வுப் பொருட்கள் மற்றும் வர்ணப்பூச்சு தூரிகைகள் என மனதைக் கொள்ளை கொள்ளும் பல்வேறு உற்பத்திகளை உள்ளடக்கியதாகும்.
JAT தொடரிலான வர்த்தகக் குறியீடுகளுள் ஒன்றான Sayerlack, 1954ஆம் ஆண்டிலிருந்து சந்தையில் நிலைத்திருப்பதுடன், மிகவும் முன்னேற்றகரமான மற்றும் புதுமையான இறுதித் தோற்றத்தை வழங்குகின்றது. புதிய தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, அபிவிருத்தி செய்வதில் அர்ப்பணிப்பு, உற்பத்தியாக்க ஆற்றலின் பரந்துபட்ட தன்மை ஆகியவற்றைக் கொண்டுள்ள Sayerlack, ஐரோப்பாவில் மர மேற்பூச்சு துறையில் மிகப் பெரிய உற்பத்தியாளர்களுள் ஒன்றாக தொடர்ச்சியாக முன்னேறி இருக்கின்றது. இவ்வுற்பத்தி இலங்கையில் JAT ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் மூலம் சந்தையில் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது.
2017 கட்டடக்கலை கண்காட்சியின் போது நீரை அடிப்படையாகக் கொண்ட மற்றும் PU சிறப்பு மாறுதல்களை ஏற்படுத்தும் உற்பத்தித் தொடர்களை JAT அறிமுகம் செய்தது. அத்துடன் Sayerlack coffee-proof வர்ணப்பூச்சு வகைகளையும் அறிமுகப்படுத்தி வைத்தது. கோப்பி போன்ற கடுமையான கறைகளுக்கு தாக்குப்பிடிக்கும் ஆற்றலை வழங்குவதற்காக இந்த குறிப்பிட்ட வர்ணப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மேற்பரப்பு மஞ்சள் நிறமாவதை அல்லது கறை படிவதை தடுப்பதை இவ்வுற்பத்தி உறுதிப்படுத்துகின்றது. அதன்மூலம், இலங்கையில் சிறந்த பலாபலன் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் இவ்வாறான ஒரு சிறப்பம்சத்தைக் கொண்ட ஒரேயொரு உற்பத்தியாகவும் இது திகழ்கின்றது.
Sayerlack வர்த்தகக் குறயீட்டு குடையின் கீழ் அறிமுகமான மற்றுமொரு புதுமையான உற்பத்தியாக வழுக்கும் தன்மைக்கெதிரான சறுக்கும் தன்மைக்கெதிரான மேற்பூச்சுக்கள் காணப்படுகின்றன. இவ்வகை உற்பத்திகள் தரைகளிலான சறுக்கும் தன்மையின் சாத்தியத் தன்மையை குறைப்பதுடன், பிடிமானத்தை அதிகப்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டவை ஆகும்.
இது அனைத்து விதமான பாதுகாப்புசார் சிறப்பம்சங்களையும் வழங்குவதற்கு புறம்பாக, அதிகமாக பாவிக்கப்படும் தரைகளில் கீறல்கள் ஏற்படுவதில் இருந்தும் பாதுகாக்கின்றது. எனவே, அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள மரத்திலான தரைகளுக்கு பாதுகாப்பையும் நீடித்த பாவனையையும் வழங்குவதற்கு இது மிகப் பொருத்தமானதாகும்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago