Editorial / 2026 மார்ச் 17 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 51.7 சதவீதத்தினர் பெண்களாக இருந்தபோதிலும், அவர்களில் 33 சதவீதத்தினர் மாத்திரமே நாட்டின் முறைசார் தொழிற்படையில் அங்கமாக உள்ளனர். பெரும்பாலான பெண்கள் போதிய நிதி அறிவின்மை மற்றும் முதலீட்டு அனுபவம் குறைவு காரணமாக, தமது நிதி எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையை மாற்றி, பெண்கள் மத்தியில் முதலீட்டு கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் JB Financial நிறுவனம் 'HerWealth' எனும் விசேட திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
2026ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், பெண்கள் தமது நிதி எதிர்காலத்திற்காகத் தன்னம்பிக்கையுடன் முதலீடுகளை மேற்கொள்ள ஊக்கமளிப்பதையும், அறிவூட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறுமனே சேமிப்புடன் நின்றுவிடாமல், முதலீட்டுத் தீர்மானங்களைச் சுயமாக எடுப்பதற்கான வழிகாட்டல்களை இது வழங்குகின்றது.
நிதி அறிவு என்பது வெறும் திறமை மட்டுமல்ல, அது ஒரு பெண்ணின் முன்னேற்றத்தில் மிக முக்கியமான அங்கமாகும் என JB Financial நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டின் டயஸ் பண்டாரநாயக்க (CFA) வலியுறுத்துகிறார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில்:
"பெண்கள் எப்போதும் மற்றவர்களின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர். ஆனால், இக்கட்டான சூழலில் சொந்தக் காலில் நிற்கும் திறன் பலருக்குக் குறைவாகவே உள்ளது. நிதி அறிவு என்பது பெண்களின் செல்வத்தைக் கட்டியெழுப்பவும், எதிர்காலத்தைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் உதவும் ஒரு பேராயுதம்."
நிதிச் சந்தைகள் குறித்து எவ்வித அனுபவமும் இல்லாத பெண்களுக்காகவே இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
HerWealth திட்டத்தில் இணைவது மிகவும் எளிதானது. விண்ணப்பப் படிவத்துடன் அடையாள அட்டை மற்றும் முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் கணக்கை ஆரம்பிக்க முடியும்.
புதிய முதலீட்டாளர்களுக்கு ஆதரவளிக்க பெண் வாடிக்கையாளர் சேவை முகாமையாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் வழிகாட்டுவார்கள். அத்துடன்:
பாரம்பரியமாகச் சேமிப்பில் ஈடுபட்டு வரும் இலங்கை பெண்கள், தற்போது மாறிவரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்பத் திறன்மிக்க முதலீட்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பது காலத்தின் கட்டாயமாகும். "நிதி ரீதியாகப் பெண்கள் சிறந்து விளங்கும்போது, அது குடும்பம் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகிறது" என்ற நம்பிக்கையுடன் JB Financial இந்த மகத்தான பணியை முன்னெடுத்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு:
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago