Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
S.Sekar / 2022 மார்ச் 29 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்மாணம் மற்றும் வீட்டு அலங்கார கண்காட்சியான Kedella Construction Expo 2022 உடன் தொடர்ச்சியான ஒன்பதாவது வருடமாகவும் பிரதான அனுசரணையாளராகவும் உத்தியோகபூர்வ வங்கியியல் பங்காளராகவும் கைகோர்த்திருந்தது. இந்த கண்காட்சி அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
தொடர்ச்சியான 15 ஆவது ஆண்டாக Asia Exhibitions & Conventions (Pvt) Ltd இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த கண்காட்சியில் சுமார் 200 காட்சிகூடங்கள் அமைந்திருந்தன. இதில் வீட்டு சாதனப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ரியல் எஸ்டேட், வீட்டுத் தோட்ட அலங்காரம், தளபாடங்கள், டைல்கள், கிரனைட் விற்பனையாளர்கள், குளியலறை சாதனங்கள், சமையலறை சாதனங்கள், மின்சாதனங்கள், பெயின்ட் வகைகள், சுவர் அலங்கார விற்பனையாளர்கள், சீலிங் அலங்காரங்கள், ஒளியூட்டல் தீர்வுகள், வீட்டு டிரேப்பர்கள் மற்றும் வங்கியியல் மற்றும் காப்புறுதி தீர்வுகள் வழங்குநர்கள் என பலரும் அடங்கியிருந்தனர்.
இந்தக் கண்காட்சியில், வீடமைப்புக் கடன்கள், பிரத்தியேகக் கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் போன்றவற்றை கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் மற்றும் கொடுப்பனவுத் திட்டங்களில் செலான் வங்கி வழங்கும். நிதிசார் உதவிகளை நாடிய, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் தீர்வுகள் மற்றும் ஆலோசனைகளையும் வங்கி வழங்கியதுடன், அவர்களின் வீட்டுக் கனவை நனவாக்குவதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
3 hours ago
3 hours ago