Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஒக்டோபர் 16 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
Kia Motors (Lanka) Limited இனால் இலங்கையில் விற்பனை செய்யப்படும் Picanto கார்களுக்கு, தயாரிப்பாளரின் 5 வருட கால உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளது.
2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து விற்பனையாகும் Kia இன் Picanto கார்களுக்கு 150,000 கிலோ மீற்றர் வரை அல்லது வாங்கிய தினத்திலிருந்து 5 வருட காலம் இவற்றில் எது முதல் நிகழ்கிறதோ அது வரை இந்த உத்தரவாதம் செல்லுபடியாகும் என்று கம்பனி அறிவித்துள்ளது.
விஸ்தரிக்கப்பட்ட 5 வருடகால உத்தரவாதத்துக்கு மேலதிகமாக, TUV Nord எனும் ஒரு சுயாதீன தொழில்நுட்ப பரிசோதினை கம்பனியினால் புதிய Kia Picanto சுற்றாடலுக்கு பாதுகாப்பானது என சான்றிதழ் வழங்கியுள்ளது. Kia நிறுவனத்தின் சுற்றாடல் சாதக நம்பகத்தன்மையை அங்கிகரித்து புதிய Rio, Optima ஆகியவற்றுக்கு ISO 14040 Life Cycle Assessment சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டப் புதிய உற்பத்தியான Picanto புரட்சிகரமான மோட்டார் வாகன வடிவமைப்பையும் அதிசிறந்த இயங்கு திறனையும் பிரதிபலிக்கிறது. one litre (998cc) Gasoline Inline three-cylinder எஞ்சினின் சக்தியில் பல்லிணைவு பட்டியுடன் 5 கதவுகளைக் கொண்ட Kia Picanto காரை five-speed manual உடன் ஆரம்பித்து four-speed automatic transmission மற்றும் high-end sports package ஆகியன வரை ஐந்து விருப்பத்தேர்வுகளுடன் பெற்றுக் கொள்ளலாம்.
பாதுபாப்புக்கென காற்றடைத்த இரட்டை பைகள் (airbags) anti-lock brake system சுற்றாடல் சாதகமான தொழில்நுட்பம், பல்வேறு விருப்பத் தேர்வுகள் ஆகியன உட்பட முன்னேற்றமான பாதுகாப்பு அம்சங்களுடன் திடத்தன்மையையும் முதிர்ச்சியையும் காண்பிக்கும் சிறப்பியல்புகள் அடங்கியுள்ளன. iPod AUX மற்றும் USB ணைப்பு, மோட்டரில் இயங்கும் ஸ்டீரிங், tilt steering system, radio, CD player, security indicator ஆகியவற்றுடன் கூடிய ஏற்புடை மாதிரியான பல அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
55 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
3 hours ago