Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூன் 13 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிராமா ஆர்க்கிடெக்ச்சர் ஆர்கேட் (MAA), துருக்கிய தயாரிப்பான Turkuaz/SeraStyle குளியலறை சாதனங்களை இலங்கையில் விநியோகிப்பதற்காக Turkuaz செரமிக் உடன் கைகோர்த்திருந்தது.
இந்த பங்காண்மையினூடாக, Turkuaz/CeraStyle தயாரிப்புகளை இலங்கையில் விநியோகிக்கும் ஏக விநியோகத்தர் எனும் நிலையை MAA பெற்றுள்ளது. ஐரோப்பாவில் அதிகளவு புகழ்பெற்ற குளியலறை சாதனங்களாக Turkuaz/CeraStyle திகழ்வதுடன், பிராந்தியத்தில் உயர் சந்தைப் பங்கையும் கொண்டுள்ளது.
சகல Turkuaz/CeraStyle குளியலறை சாதனங்களும் ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. மூன்று மில்லியன் செரமிக் துண்டுகள் வருடாந்தம் இந்த உற்பத்தி பகுதிகளினூடாக தயாரிக்கப்பட்டு, உலகின் 30 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. Cerastyle உற்பத்திஆலை, ஐரோப்பாவின் மாபெரும் வொஷ் பேசின் (Wash Basin) உற்பத்தியாளராக திகழ்கிறது.
Turkuaz/CeraStyle குளியலறை சாதனங்கள் நீடித்த உழைப்புக்கு புகழ்பெற்றன. புத்தாக்கமான தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வடிவமைப்புகளில் காணப்படுகின்றன.
அதன் அலங்கார சிறப்புக்காக Turkuaz /CeraStyle தயாரிப்புகள் பல விருதுகளை வென்றுள்ளன. இதில் ‘IF Design Award 2017’ மற்றும் ‘Design Turkey’ – Good Design Award 2017 போன்றன அடங்குகின்றன.
உலகத்தரம் வாய்ந்த ஃபோசெட்கள் மற்றும் டைல் வகைகளுக்கு இலங்கையில் ஏக விநியோகத்தராக MAA திகழ்கிறது. இதில் ஸ்பெயின் நாட்டின் PLAZA டைல்கள் மற்றும் துருக்கியின் ADELL ஃபோசெட்கள் போன்றன அடங்குகின்றன. இதன் பிரகாரம், இலங்கையின் முன்னணி கட்டடக் கலைஞர்களின் பரிந்துரைக்கும் டைல்கள், குளியலறை சாதனங்கள் மற்றும் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கான ஒரே இடமாக MAA அமைந்துள்ளது.
மிரமா ஆர்கிடெக்ச்சர் ஆர்கேட் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பொது முகாமையாளர் சம்பத் விஜேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ‘இலங்கையர்களுக்கு, ஐரோப்பாவிலிருந்து உலகத் தரம் வாய்ந்த குளியலறை தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.
இந்த நோக்கத்தை முன்நோக்கி கொண்டு செல்லும் வகையில், நாம் உலகத் தரம் வாய்ந்த Turkuaz/CeraStyle குளியலறை சாதனங்களை உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்திருந்தோம். Turkuaz /CeraStyle தயாரிப்புகள் இல்லங்களுக்கு பெறுமதி சேர்ப்பதுடன், உயர் மட்ட வாழ்க்கைக்கு உதவுவதாகவும் அமைந்திருக்கும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
20 May 2025
20 May 2025