Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 நவம்பர் 06 , பி.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
MCB வங்கி தனது காலி கிளையை மெருகேற்றம் செய்து புதிய முகவரியில் அங்குரார்ப்பணம் செய்திருந்தது. 2013 ஆம் ஆண்டு இந்த கிளை முதன் முதலில் திறந்து வைக்கப்பட்டதுடன், MCB இலங்கை செயற்பாடுகளில் வெளிநகரில் திறந்து வைக்கப்பட்ட இரண்டாவது கிளையாக அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் MCB வங்கியின் இலங்கைக்கான பொது முகாமையாளர் ஆலி ஷாஃபி மற்றும் வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கோமரன் குரூப் ஒஃவ் ஹோட்டல்ஸ் தலைமை அதிகாரி நிமல் கீகனகே, ட்ரஸ்ட் ஜெம்ஸ் ஹோல்டிங்ஸ் தலைவர் மொஹமட் நிஸாம், தில்ஷார எக்ஸ்போர்ட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் துஷாந்த குமார மற்றும் இதர முன்னணி வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
MCB காலி கிளை தற்போது நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நவீன வங்கிக் கிளை வடிவமைப்பு வசதிகளை கொண்டுள்ளதுடன், சகல MCB வெளிநாட்டு கிளைகளிலும் பின்பற்றப்படும் கூட்டாண்மை வர்த்தக நாம தொனிப்பொருளுக்கமைய அமைந்துள்ளது.
5 வருட காலப்பகுதியில், தனது வாடிக்கையாளர் இருப்பை விரிவடையச் செய்திருந்ததுடன், வியாபாரத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது. “அண்மைக் காலங்களில், எமது கிளை வலையமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஊழியர்கள் போன்றவற்றில் நாம் குறிப்பிடத்தக்களவு முதலீட்டை மேற்கொண்டுள்ளோம். புதிதாக மெருகேற்றம் செய்யப்பட்ட காலி கிளை இதற்கு மற்றுமொரு உதாரணமாகும். எமது வாடிக்கையாளர்களுக்கு நாம் வழங்கும் சேவைகள் மற்றும் நாட்டின் வங்கியியல் துறையின் விருத்திக்கு நாம் வழங்கும் பங்களிப்பு போன்றவற்றுக்கான உதாரணமாகவும் இது அமைந்துள்ளது” என ஆலி ஷாஃபி தெரிவித்தார்.
MCB ஸ்ரீ லங்காவின் பெறுபேறுகள் தொடர்பில் ஆலி குறிப்பிடுகையில், நாட்டின் மொத்த வங்கியியல் துறைக்கு 2018 சவால்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளதாகவும், MCB இனால், தனது ஐந்தொகை மற்றும் இலாபகரத்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்தது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago