2024 மே 03, வெள்ளிக்கிழமை

MMCA இலங்கை தனது முதல் சர்வதேச நிகழ்வை முன்னெடுக்கிறது

Freelancer   / 2023 ஒக்டோபர் 13 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை) அதன் முதலாவது சர்வதேச கலை நிகழ்வை நடத்தவுள்ளது. MMCA இலங்கையானது, இலங்கை கலைஞர்களின் கலைப்படைப்புகளை சிறப்பாக தொகுத்து, இந்நிகழ்வை இந்த ஒக்டோபர் மாதம் லண்டனில் வழங்கவுள்ளது. கலை உலக நாட்காட்டியின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான London’s Frieze வாரத்துடன் (11–15 ஒக்டோபர் 2023) நடக்கும் இந்த நிகழ்வில், MMCA இலங்கை தற்போது நடத்தும் ‘அந்நியர்’ என்ற தலைப்பிலான கண்காட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளி படைப்புகள் காண்பிக்கப்படும். அவற்றைத் தொடர்ந்து தேர்ந்த குழுவுடனான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படும்.

இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் Deutsche Börse Photography Foundation பரிசை வழங்கும் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட அருங்காட்சியகமான The Photographers’ Gallery லண்டனுடன் இணைந்து, ஒக்டோபர் 12ம் திகதி நடைபெற்றது.

‘அந்நியர்’ கண்காட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட காணொளி திரையிடல்களில் டினெல்க லியனகே, ஹனியா லுதூபி, இமாத் மஜீத், நீனா மங்களநாயகம் மற்றும் சுமுதி சுரவீர ஆகியோரின் படைப்புகள் உள்ளடங்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, இங்கிலாந்திலுள்ள எடுத்தாளுனர், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளரான ஹமாட் நாசரின் தலைமையில், MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுனர் ஷாமினி பெரேரா, எடுத்தாளுனர் சந்தேவ் ஹன்டி மற்றும் கலைஞர்களான நீனா மங்களநாயகம் மற்றும் ரெஜினோல்ட் எஸ். அலோய்சியஸ் ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஹன்டி இந்நிகழ்ச்சியைப் பற்றி பேசுகையில், “Frieze வாரத்தில் ‘அந்நியர்’ கண்காட்சியின் ஒரு பகுதியை லண்டனுக்கு எடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது, ஏனெனில், அந்நியத்துவத்தின் சிக்கிய அனுபவங்களை கண்காட்சியில் உள்ள படைப்புகள் பல்வேறு வழிகளில் எடுத்துக்காட்டுகின்றன. இடம்பெயர்வு, காலநிலை மற்றும் புகலிடம் பற்றி உலகம் முழுவதிலும் நடைபெறும் கலந்துரையாடல்களில் இது முன்னணியில் உள்ள ஒரு விடயமாகும்” என்று கூறினார். “இந்த நிகழ்வானது, இந்த தீவின் உள்ளூர் கலை வரலாறுகளை ஒன்றிணைத்து, உலகளாவிய கலை வரலாறுகளில் இல்லாதவற்றைத் தெரிவிக்கவும் நிரப்பவும் உதவுவதுடன், அந்நியத்தன்மை குறித்து மக்களது கண்ணோட்டத்தையும், வேறுபட்டவர்களை வகைப்படுத்துவதற்கு காலாகாலமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள உருவகங்களையும் எதிர்த்து, மீள் கற்பனை செய்து, மாற்றியமைக்கும் என்று நம்புகிறேன்,” என ஹன்டி மேலும் கூறினார்.

பொது மக்கள், பாடசாலைகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நன்மை மற்றும் மகிழ்ச்சிக்காக நவீன மற்றும் சமகால கலைகளின் காட்சி, ஆராய்ச்சி, சேகரிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள நாட்டின் முதல் அருங்காட்சியகமான MMCA இலங்கையிற்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த முக்கிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கலை உலக நாட்காட்டியில் இது போன்ற ஒரு முக்கியமான நேரத்தில், லண்டனில் உள்ள The Photographers’ Gallery உடன் எங்களது கூட்டு முயற்சியானது, MMCA இலங்கையை உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரும்” என்று குறிப்பிட்ட பெரேரா, “சர்வதேச கலை உலகில் ஏற்கனவே நடந்தவற்றை மேலும் கட்டியெழுப்ப விரும்புகிறோம்; மிக முக்கியமாக ஆராய்ச்சி, உள்ளூர் அறிவு மற்றும் ஒரு அருங்காட்சியகம் உருவெடுக்கும்போது அதிகரிக்கும் நிபுணத்துவம் ஆகியவற்றின் நிலையிலிருந்து உரையாடலை வடிவமைப்பதன் மூலம் அதனைப் பெருக்கி கட்டியெழுப்ப விரும்புகிறோம்,” என்று மேலும் விபரித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .