2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

MMCA இலங்கை மற்றும் செலின் நிறுவனம் இணைந்து சிறப்பு துணிகளை அறிமுகப்படுத்தவுள்ன

Editorial   / 2023 நவம்பர் 10 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோர்ஜ் கீற்றின் ரசிகர்கள் அனைவரும் வைத்திருக்க வேண்டிய சாரம் மற்றும் கழுத்துத்துண்டுகள் அவரின் இரு ஓவியங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன.

நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை) செலின் நிறுவனத்தின் வடிவைமைப்பினூடாக மாற்றம் எனும் சமூக திட்டத்தின் கீழ், ஜோர்ஜ் கீற்றின் (1901–1993) இரு ஓவியங்களை மையப்படுத்தி தயாரிக்கப்பட்ட துணிகளை உருவாக்கியுள்ளனர். ‘The Kandyan Bride’ (1951) மற்றும் ‘The Offering’ (1948) எனும் கீற்றின் இரு ஓவியங்களை மையப்படுத்தி குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே விற்பனைக்குரிய சாரம் மற்றும் இரு கழுத்துத் துண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்விரு ஓவியங்களும் கடந்த மார்ச் மாதம் 2023 நிறைவுற்ற MMCA இலங்கையின் கடந்த கண்காட்சியான ‘சந்திப்புகள்’ இல் மூன்றாவது சுழற்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ் இணைப்பானது, MMCA இலங்கையின் தலைமை எடுத்தாளுநர் ஷர்மினி பெரெய்ரா, செலின் நிறுவனத்தின் இயக்குனரான செலினா பீரிஸை, இவ்விரு ஓவியங்களை மையப்படுத்தி தனித்துவமான செலின் துணிகளை தயாரிக்கும் யோசனையை முன்வைத்தார். இவ் இணைப்பைப் பற்றி பெரெய்ரா கூறுகையில், “சமகால வடிவமைப்பாளர்களினூடாக நவீன ஓவியர்களின் படைப்புகளை செலினின் முன்னெடுப்பின் ஊடாக நன்றாக நோக்கமுடிகின்றது. செலினின் வடிவைமைப்பாளர்கள் அழகிய பொருட்களை தயாரிப்பதுடன் அவற்றின் கருத்தாக்கம் இந்நாட்டின் கலாசார வரலாற்றுகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் செலின் நிறுவனம் சில பொருட்களை தயாரித்துள்ளது. அவர்கள் பெருக்கும் அளவிலான பொருட்களை தயாரிக்கும் அதே வேளையில் எனது சின்னஞ்சிறு ஆசைகளையும் நிறைவேற்றியுள்ளது.”

MMCA இலங்கையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஜோர்ஜ் கீற்றின் இரு ஓவியங்களை பார்வையிட்ட பின்னர், குறிப்பாக ‘The Kandyan Bride’ (1951) ஓவியத்தில் பெண் உருவம் அணிந்திருந்த ஒசரிய சேலையை முன்னிறுத்தி செலினில் இருந்து வருகை தந்திருந்த வடிவமைப்பாளர்கள் தனித்துவமான துணிகளை கண்டறிந்தனர். அடுத்த மூன்று மாதங்களுக்கு அத் துணிகளை பற்றி மேலதிகமாக ஆராய்ந்து மூன்று தனித்துவமான கைத்தறி துணிகளை அவ் ஓவியங்களுக்கு இசைவாக வடிவமைத்தனர். வடிவமைப்பாளர்கள் சீமாந்தனி வந்துரங்கள, ஜோலா ஹவுஸ்சைல்ட் மற்றும் லக்ஷானி ஜயதிலக்க, கீற் பாவித்துள்ள நிறங்களை மட்டுமல்லாது ஒவ்வொரு ஓவியத்தின் கருப்பொருளையும் ஆராய்ந்து இத்துணிகளை தயாரித்துள்ளனர்.

உதாரணத்திற்கு, கீற்றின் ‘The Offering’ (1948) ஓவியத்திற்கு இசைவாக உருவாக்கப்பட்ட துணி, அவ் ஓவியத்திலுள்ள இரு உருவங்களின் ஆடைகளை ஒன்றாக்கி உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், கழுத்துத்துண்டு, இடது பக்கத்தில் நிற்கும் உருவத்தின் கட்டம் போட்ட ஆடையின் பச்சை மற்றும் ஊதா நிற கோடுகளையும், வலது பக்கம் நிற்கும் உருவத்திற்கு நேரெதிர் கோடுகளை கொண்டுள்ளது. கீற்றின் ஓவியத்தைப் போல இக் கழுத்துத்துண்டு, தனித்துவமான வடிவியல் உருவத்தை கொண்டு, ஓவியத்தில் இரு உருவங்களும் சமச்சீரான முறையில் நிற்பதை குறிக்கின்றது. ஓவியத்திலுள்ள இரு உருவங்களினிடையே காணப்படும் தெளிவின்மையை, செலினின் வடிவமைப்பு குழு, இக் கழுத்துண்டை இருபாலரும் அணியக்கூடிய வகையில் உருவாக்கி ஓவியத்திற்கு இசைவாக உருவாக்கியுள்ளனர். மற்றைய இரு துணிகளும் ‘The Kandyan Bride’ (1951) எனும் ஓவியத்திலுள்ள பெண் உருவம் அணிந்துள்ள ஒசரியவை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.

செலினின் கைத்தறி துணிகள் இலங்கையின் 2500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கைத்தறியின் அங்கமாகும். அனைத்து துணிகளும் நியாயமான முறையில், வீகன் மற்றும் மிருக வதையற்ற முறையில் செலினின் வந்துரங்கள பட்டறையில் பணிபுரியும் நெசவாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

MMCA இலங்கையுடனான கூட்டணியைப் பற்றி செலினின் செலினா பீரிஸ் கூறுகையில், “MMCA இலங்கையுடன் இணைந்து எமக்கு தெரிந்த விடயங்களை ஓவியர்களும் ஏனைய கலைஞர்களும் எவ்வாறு மீள் கற்பனை செய்கிறார்கள் என்பதை இவ் கால வரையறைக்குட்பட்ட சாரம் மற்றும் கழுத்துத்துண்டுகளினூடாக சித்தரிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம். இத் துணிகளை வாங்குவது மற்றும் அணிவதினூடாக நீங்கள் செலின் ஸ்தானத்தையும் MMCA இலங்கைக்கும் உங்கள் அனுசரணையை வழங்குகின்றீர்கள்.” அவர் மேலும் கூறுகையில், “இத் துணிகள் செலின் மற்றும் செலின் ஸ்தாபனத்தின் கூட்டு முயற்சியான செலின் மாற்றத்திற்கான வடிவமைப்பு எனும் திட்டத்தினூடாக இலங்கையின் கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய உலகப் புகழ் பெற்ற வடிவமைப்பாளர்கள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவியுடன் விழிப்புணர்வு, புதுப்பித்தல் மற்றும் நீண்ட காலம் நீடிக்க வழிவகுக்கின்றது. இத் துறையானது பொதுவாக பெண் கலைஞர்களை கொண்டுள்ளது. MMCA இலங்கையைப் போன்ற கலாசார தொழிலும் முன்னெடுப்பு, தலைவருக்கான மேம்பாடு மற்றும் பண கையாளல் மற்றும் வாய்ப்புகளையும் பெண்களுக்கு வழங்கும் நிறுவனத்துடன் கூட்டணி வைத்திருப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.”

குறுகிய காலத்திற்குள் விற்பனைக்குரிய கழுத்துண்டு அல்லது சாரத்தை வாங்குவதற்கு பதிவு செய்யப்பட MMCA இலங்கையின் இன்ஸ்டாகிராம் பகுதியில் instagram.com/mmcasrilanka/ அல்லது முகநூலில் facebook.com/mmcasrilanka/ இவ் அனைத்திலும் தொடர்புகொள்ளலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .